Skip to main content

வெளிநாட்டில் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம் 

Published on 13/03/2018 | Edited on 14/03/2018
sree


சமீபத்தில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தி சென்னையில் கரைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மறைவுக்காக சென்னை, மும்பை, ஐதராபாத் நகரங்களில் இரங்கல் கூட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்று ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல் வெளிநாடுகளில் நடைபெறும் இரங்கல் கூட்டங்களில் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அங்குள்ள  உணவகம் ஒன்றில் ஸ்ரீதேவி உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டு புடவை நகைகள் அணிவித்து வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீ தேவி மகள் ஜான்வி மனதை கவர்ந்த நடிகர் 

Published on 31/05/2018 | Edited on 01/06/2018
jhanvi


நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு பிறகு தற்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு மாறியிருக்கும் அவரது மகள் ஜான்வி தற்போது மராத்தி மொழியில் மாபெரும் வெற்றிபெற்ற 'சாய்ரட்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகை ஜான்வி தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்து பேசுகையில்... "இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் என்னை கவர்ந்துவிட்டது" என கூறியுள்ளார். மேலும் அவரை விரைவில் ஸ்ரீ தேவி போல் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. 

Next Story

ஸ்ரீதேவி மரண வழக்கில் நீதிமன்றம் உத்தரவு! 

Published on 11/05/2018 | Edited on 12/05/2018
irumbu thirai.jpeg

 

 

sri devi


நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் உள்ள ஓட்டல் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். இது திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் இன்னமும் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.