கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி நேற்று மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார்.
இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.பி.பி மூச்சுவிடாமல் பாடிய 'மண்ணில் இந்த' பாடலோடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் எஸ்.பி.பி சார் உங்களுக்காக காத்திருக்கிறோம் #GetWellSoonSPBSIR" என கூறியுள்ளார்.
இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம் #GetWellSoonSPBSIR ??? pic.twitter.com/RmwGhPGPAD
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 20, 2020