Skip to main content

கோலிவுட்டில் முதல் நடிகர்... புதிய மைல்கல்லை தொட்ட சிம்பு

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

Silambarasan becomes first Hollywood star highest followers instagram

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பத்து தல படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

ad

 

இந்நிலையில் நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் நடிகர் சிம்புவை 6 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் கோலிவுட் சினிமாவில் அதிக பேர் பின்தொடரும் முதல் நடிகர் என்ற சாதனையை நடிகர் சிம்பு படைத்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் இணைந்த சிம்பு மிக குறிகிய காலத்தில் இந்த சாதனையை எட்டியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்