Skip to main content

"என்னுடைய அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம் இது தான்" - செல்வராகவன்

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

selvaraghavan praise a manirathnam, ar rahman in ponniyin selvan music album

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதுவரை உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.   

 

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல்கள் குறித்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம்,  ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் என்பதில் சந்தேகமே இல்லை. மிக மிகச் சிறிய இடத்தில் கூட கவனம் செலுத்துவது பிரம்மிக்க வைக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பொன்னியின் செல்வன் படக்குழுவும் செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

 

செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் 'நானே வருவேன்' படம் வெளியானது. இதனிடையே நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் மோகன்.ஜி இயக்கும் 'பகாசூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஃபர்ஹானா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்