Skip to main content

ஐந்து கெட்டப்; சந்தானத்தை இயக்கும் ஷங்கரின் உதவி இயக்குநர்

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

santhanam next movie update out now

 

மேயாத மான், ஆடை படத்தை இயக்கிய ரத்னக் குமார், நடிகர் சந்தானத்தை வைத்து 'குலுகுலு' படத்தை இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் காமெடி படமாக சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

 

ad

 

இந்நிலையில் நடிகர் சந்தானத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த கோவர்தன் இயக்கத்தில் சந்தானம் அடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ட்ரேட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டார்க் ஃப்பேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தில் சந்தானம் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனிடையே சந்தானம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' மற்றும் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்