Skip to main content

சமந்தாவின் அடுத்த பட கிளிம்ஸ் காட்சி வெளியீடு

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

Samantha's next film glimpse released

 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் கதிஜா பேகம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமந்தா அடுத்ததாக ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இருவரும் இணைந்து இயக்கும் 'யசோதா' படத்தில் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். 'ஸ்ரீ தேவி மூவிஸ்' நிறுவனம் சார்பாக சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார். 

 

இந்நிலையில் 'யசோதா' படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ஸ் காட்சி வெளியாகியுள்ளது. இதில் சமந்தா கர்ப்பமான நிலையில் மருத்துவமனையின் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறார். ஜன்னல் அருகில் சென்று வெளியில் இருக்கும் புறாவை தொட முயற்சிக்கிறார். சைன்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்