Skip to main content

யு டர்ன் அடிக்கும் சமந்தா

Published on 20/02/2018 | Edited on 21/02/2018

sam


அனுஷ்கா, நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து தற்போது சமந்தாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள புதிய நடிக்கிறார். இவர் நடிப்பில் 'இரும்புத்திரை' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'சீமராஜா' படத்திலும், ராம் சரண் ஜோடியாக 'ரங்கஸ்தலம்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கன்னடப்படமான 'யு-டர்ன்' தமிழ் ரீமேக்கில்  தற்போது சமந்தா நடிக்கத் துவங்கியிருக்கிறார். இப்படத்தில் படத்தில் நடிகர் ஆதி போலீசாகவும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தாவும் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"நாங்க எல்லாம் நடிக்கணும்னா மூளைய கழட்டி வச்சுட்டு வரணும்" - சமந்தா ஓப்பன் டாக் 

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

'லூசியா', 'யூ-டர்ன்' படங்களின் மூலம் கவனமீர்த்த பிரபல கன்னட இயக்குனர் பவன், யூ-டர்ன் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார். சமந்தா, ஆதி, நரேன், 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைபடக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.


 

samantha



நிகழ்வில் பேசிய சமந்தா யூ-டர்ன் தன் மனதுக்கு மிக நெருக்கமான படமானதன் காரணத்தைக் கூறினார்... 

"பொதுவாக ஹீரோயின்ஸ் நாங்க எல்லாம் ஒரு படத்துல நடிக்கணும்னா எங்களோட உண்மையான கேரக்டரை மறந்துடணும். சொல்லப்போனா மூளையை வீட்டிலேயே கழட்டி வச்சுட்டு வந்துரணும். அந்த மாதிரியான கேரக்டர்ஸ்தான் பெரும்பாலும் எங்களுக்கு இருக்கும். சில படங்களில்தான் எங்களை நாங்கள் தாழ்த்திக்க தேவையில்லாத பாத்திரங்கள் அமையும். யூ-டர்ன் படத்தை எனக்கு ரொம்பப் பிடிக்க, என் மனசுக்கு நெருக்கமாக காரணமே இந்த கேரக்டர்தான். நான், நானா இருக்கேன். அப்படியே இருப்பதற்கான வாய்ப்பை இந்தப் படம் தந்திருக்கு. அதனால்தான் இந்தப் படத்தின் ப்ரோமோஷன்ஸ் எல்லாத்திலும் நானும் பங்கேற்கிறேன். பொதுவா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், சில ஹீரோக்கள்..இவங்கதான் ஒரு படம் முடிச்சு வெளியாகி வெற்றி பெரும் வரை ஒரு பெரிய பாரத்தை சுமப்பாங்க, ராப்பகலா. இந்தப் படத்தில் நான் அப்படி ஒரு பொறுப்பை உணருகிறேன். இந்தப் படத்தில் கன்டென்ட்தான் ஹீரோ, வேற யாருமில்ல" என்றார்.

 

 


நிகழ்ச்சி தொகுப்பாளர் "நீங்க சொல்றதைப் பார்த்தா சீக்கிரம் டைரக்டர் ஆவீங்க போல?" என்று கேட்க, "அந்த ஆசையெல்லாம் இல்லை" என்று சமந்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே கீழே அமர்ந்திருந்த இயக்குனர், "ஏற்கனவே அவுங்க நெறய டைரக்ட் பண்றாங்க" என்றார். அதைக் கேட்ட சமந்தா, "இந்தப் படத்தின் இயக்குனரும் நானும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தோம். வீ ஹேட் ஈச் அதர் (we hate each other  - நாங்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம்) (சிரித்துக்கொண்டே சொல்கிறார்). படம் முடியறதுக்குள்ள அவரை நான் கொல்லாம இருக்கணும். அந்த அளவுக்கு சண்டை போடுறோம்" என்று சிரித்துக்கொண்டே பேச்சை முடித்தார்.