Skip to main content

தன்னை தானே சாட்டையால் பலமாக தாக்கிக்கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ... வைரலாகும் வீடியோ!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

சல்மான் கான் - சஞ்சய் லீலா பன்சாலி இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு சவாரியா படத்திற்கு பிறகு தற்போது ஒன்றாக இணைந்து இன்ஷா அல்லா படத்தை உருவாக்க  திட்டமிட்டிருந்தனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஈகை திருநாளில் வெளியாக இருப்பதாக முதலில் இப்படக்குழு அறிவித்திருந்தது. இதில் சல்மான் கான் உடன் அலியா பட் முதன் முறையாக ஜோடியாக நடிப்பதாக இருந்தது.
 

salman khan


இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாதி குறித்து ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. மேலும் சில எழுத்து வேலைகள் தேவைப்படுவதால் இப்படம் அறிவித்த தேதியில் வெளியாகாது என்று பன்சாலி பிக்சர்ஸ் அறிவித்தது.
 
"சஞ்சய் லீலா பன்சாலி உடனனான திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் உங்கள் அனைவரையும் 2020 ஈகைத் திருநாளில் சந்திப்பேன். இன்ஷா அல்லா" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சல்மான். இவர்கள் இருவரும் படம் தாமதமாக வெளியாகும் என்று சொன்னாலும் சமூக வலைதளத்தில் படம் ட்ராப் என்று பேசி வருகின்றனர். 
 

sixer ad


இந்த வருடம் டிசம்பர் மாதம் 'தபாங் 3' வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங்தான் நடைபெற்று வருகிறது. நடிகர் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சாட்டையால் அடித்துகொண்டு சாகசம் செய்பவர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர்களிடம் இருந்து சாட்டையை வாங்கிக்கொண்டு தன் உடம்பில் சாட்டையை ஓங்கி ஓங்கி பளார் என்று அடித்துகொண்டுள்ளார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். நட்சத்திரம் என்பதை மறந்து சல்மான் ரசிகர்களிடையே அன்பாக பழகுவார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thr is pleasure in feeling n sharing thr pain ahhhhhhhhhhhh Baccha party don't try this on your self or on any 1 else

A post shared by Salman Khan (@beingsalmankhan) on


மேலும் அந்த பதிவில் , அவர்களின் வலியை உணர்ந்துகொள்வதிலும் பகிர்ந்துகொள்வதிலும் நான் பெருமைபடுகிறேன். மேலும் இதை யாரும் செய்து பார்க்காதீர்கள். யார் மீதும் செய்து பார்க்காதீர்கள் என்று அறிவுரை செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்