Skip to main content

 'பாகுபலி' - 'கே.ஜி.எஃப்' கூட்டணி படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பம்!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021
cvsfvsfedgegeddb

 

'கே.ஜி.எஃப்' படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் அடுத்ததாக 'கே.ஜி.எஃப் 2' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பிரஷாந்த் நீல் அடுத்ததாக 'பாகுபலி' புகழ் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் இப்படத்தில் அரசியல் நிருபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

 

htdjtrjtfr

 

தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் 'சலார்' திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுவரை 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த நிலையில் 'சலார்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்த படப்பிடிப்பில் பிரபாஸுடன் ஸ்ருதிஹாசனும் கலந்துகொண்டுள்ளார். 'சலார்' படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்