Skip to main content

"கரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்...யோசிக்காமல் உதவி செய்தார்!" - ரோபோ ஷங்கர் 

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

vdvds


தமிழில் தற்போது முன்னணி காமெடியன்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகர் ரோபோ ஷங்கர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் தனுஷ் இக்கட்டான நேரத்தில் தனக்கு செய்த உதவி குறித்து பேசியபோது...

 

vdsvsd

 

"கரோனா காலகட்டத்தில் ஒரு பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு ஃபோன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்கு குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியை செய்தார் அவர். தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, வாழ்க்கை கொடுத்திருக்கிறார். என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்