Skip to main content

“கடவுள்தான் உங்களுக்கு புத்தியைக் கொடுக்கணும்”- பதிலடி கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

நயன்தாராவைக் கிண்டல் செய்யும் தொனியில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு, பதிலடிக் கொடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
 

nayanthara mukuthi amman

 

 

எல்.கே.ஜி படத்தை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி நடித்து, இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன் தாரா, மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தென்காசி, நெல்லை ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அம்மன் வேடத்தில் நயன்தாரா இருப்பதுபோன்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த 29ஆம் தேதி வெளியிட்டார் ஆர்.ஜே. பாலாஜி. 

இந்த போஸ்டருக்கு நன்றி தெரிவித்தவர்களுக்கு ஆர்.ஜே. பாலாஜி தனது நன்றியைத் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார். அப்போது ஒருவர், யாரு அம்மன் வேடம் போடணும் அப்படிங்கிற கூறுபாடு இல்லாமல் போய்விட்டது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவருடைய கமென்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.ஜே. பாலாஜி, “துர்கை ராஜ்.. உங்கள் பெயரில் இருக்கிற கடவுள் தான் உங்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்