Skip to main content

'கன்னி ராசி'... மீண்டும் ஒரு காதல் தொடர்

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

new web series started blacksheep

 

சினிமா ரசிகர்களிடையே திரைப்படங்களுக்கு நிகராக வெப் தொடரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிளாக்சிப் யூடியூப் தளத்தில் வெளியான கல்யாண சமையல் சாதம், என்ன சொல்ல போகிறாய், ஆஹா கல்யாணம் உள்ளிட்ட வெப் தொடர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் மீண்டும் அந்த குழு 'கன்னி ராசி' என்ற தலைப்பில் வெப் தொடர் ஒன்றை உருவாக்கி வருகிறது. பிளாக்சிப் யூடியூப் சேனலின் சொந்த ஓடிடி தளமான Bs valueக்காக உருவாக்கப்படும் இந்த தொடரை அன்புதாசன் இயக்குகிறார். இந்த தொடரில் சேட்டை ஷெரீப் ஹீரோவாக நடிக்க, அபிஷேக் குமார், ஸ்வேதா, ஷாம்னி, பதின் குமார், அருண் கார்த்தி, குட்டி மூஞ்சி விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த தொடர் கதை நாயகன் சுற்றி சுழல்கிறது, ஒரு நல்ல வேலையுடன் கச்சிதமான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவரது கனவு  நிறைவேறாமல் இருக்கிறது. பின்னர் அவரது வாழ்கை Mr. X என்ற ஒருவரை சந்தித்த பிறகு, அவனது கனவு வேலை அவனுக்கு கிடைக்கிறது, அதிலிருந்து அவன் வாழ்கை சிறப்பானதாக மாறுகிறது. நாயகன்  எப்படி அவனது கனவு வேலையை அடைந்தான்?, Mr. X யார்?, இது தான் கன்னிராசி வெப் தொடர். மொத்தம் 10 எபிசோட்களை கொண்ட இந்த தொடரை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்