Skip to main content

விஷாலுக்கு ஆடியோ லாஞ்சில் நடக்கும் பாராட்டு விழா

Published on 20/04/2018 | Edited on 21/04/2018
mr chandramouli


கிட்டத்தட்ட 50 நாட்களாக நடைபெற்ற சினிமா நேற்றுடன் முடிவடைந்து இன்று முதல் வழக்கம் போல் பட வெளியீடு, படப்பிடிப்பு, மற்றும் படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. இதில் முதல் கட்டமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான மெர்குரி படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்ட்ரைக் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நடிகர்கள் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா கசண்டரா நடிப்பில், இயக்குனர் திரு இயக்க, ஜி.தனஞ்செயன் தயாரித்து வரும் 'Mr.சந்திரமெளலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டை பெரிய நிகழ்ச்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்கில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் 'Mr.சந்திரமெளலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும் இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்குபெறுவதால் இது அவருக்கான பாராட்டு விழாவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்