Skip to main content

"என் மகளுக்கு கிடைத்ததில் ஆச்சர்யமில்லை! ஆனால் எனக்கோ..." - மோகன் லால் நெகிழ்ச்சி!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

vdsv

 

மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம் 2’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிகர் மோகன் லால் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு புத்தகம் ஒன்றைப் பரிசளித்துள்ளார். இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அமிதாப் பச்சன், மோகன் லாலுக்கும் அவரது மகள் மாயாவிற்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு மோகன் லாலும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் கமன்ட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் மோகன் லால் மீண்டும் நடிகர் அமிதாப் பச்சன் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

bcxb

 

"ஒரு லெஜெண்ட் இடம் இருந்து வரும் பாராட்டு வார்த்தைகளை, என் மகளுக்குக் கிடைக்கும் சிறந்த வாழ்த்தாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு தந்தையாக இது எனக்கு பெருமைமிக்க தருணம். நன்றி அமிதாப் பச்சன் சார்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்