Skip to main content

நாயகனாகும் மன்சூர் அலி கான்... 24 கிலோ எடை குறைப்பு!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
 

mansoor ali khan

 

 

மன்சூர் அலிகான் கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ஜாக்பாட் படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த ஆண்டு பல படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. 

சமீபத்தில் வெளியான கைதி படத்தில் ஹீரோவாக முதலில் நடிப்பதற்கு இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் யோசித்து வைத்திருந்தது மன்சூர் அலிகானைதான். அதன்பின் தான் நடிகர் கார்த்தியை வைத்து எடுத்தார். இந்நிலையில் மன்சூர் அலிகான் பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கதையின் நாயகனாக நடிக்க இருப்பதால் 120 கிலோ எடையில் இருந்த மன்சூர் 96 கிலோவாக தன்னுடைய எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்