Skip to main content

தடைகளை தகர்த்தெறிந்து திரையில் தோன்றிய சிம்பு

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

maanaadu movie released now

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில வெளியான ‘மாநாடு’ ட்ரைலர்  ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் நவம்பர் 25ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

 

ad

 

இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘மாநாடு’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று (24.11.2021) அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், படத்தின் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்து, திட்டமிட்டபடி ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்