Skip to main content

பதற்றமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் 

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
keerthy suresh


மறைந்த முன்னால் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் உருவாகி வரும் படம் தமிழிலும் 'நடிகையர் திலகம்' என உருவாகி வருகிறது. இதில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். மற்றும் பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அப்போது விழாவில் படத்தில் நடிக்க காட்டிய தயக்கத்தை பற்றி பேசும்போது..."பெண் என்பவள் பலம் பொருந்தியவள் என்பதற்கும், நினைத்ததை சாதித்து காட்டுவாள் என்பதற்கும் உதாரணமாக வாழ்ந்தவர் நடிகை சாவித்திரி. அவரது கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா...? என்று தயங்கினேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் உற்சாகம் அளித்ததால் ஒப்புக்கொண்டேன். சாவித்திரி சம்பந்தமான புத்தகங்களை படித்தும், அவரது மகள் சாமுண்டீஸ்வரியிடம் விவரங்கள் சேகரித்தும் பல விஷயங்களை தெரிந்துகொண்டு இந்த படத்தில் நடித்தேன். சாவித்திரியாக நடித்தது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்துகொள்ள பதற்றமாக இருக்கிறது" என்றார்.

சார்ந்த செய்திகள்