Skip to main content

29 வயதில் மாரடைப்பு; நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கார்த்தி

Published on 30/01/2023 | Edited on 30/01/2023

 

 Karthi paid tribute to his fan

 

நடிகர் கார்த்தி நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது மக்கள் நல மன்றம் சார்பாக மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார். அந்த மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்டத்தின் பொருளாளர் வினோத் அண்மையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 29. இந்த செய்தியை அறிந்த கார்த்தி திருவான்மியூரில் உள்ள வினோத்தின் வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார். 

 

கார்த்தி தற்போது தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்க கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப் பணிகளை ஜி.வி.பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிக்கிறது. 

 

இப்படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி மற்றும் '96' பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்