Skip to main content

‘காதல்’ பட நடிகர் திடீர் மரணம்!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

babu

 

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் 'காதல்'. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகர் பாபு, விருச்சககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகர் பாபு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்த விஷயம் இணையத்தில் வைரலான ஒரு வீடியோ மூலம் தெரியவர, திரைத்துறையினர் சிலர் அவருக்கு உதவிகள் செய்தனர். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு ஆட்டோவில் படுத்து உறங்கிய பாபு, நேற்று (23.03.2021) காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இறந்து பலமணி நேரங்கள் கழிந்த பின்னரே, அவர் மரணம் குறித்த செய்தி திரைத்துறையினருக்கே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்