Skip to main content

'இன்னும் சில வருடங்களில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவேன்' - ஜீவா அதிரடி 

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
jiiva

 

 

 

'கலகலப்பு 2' படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் 'கீ' படம் ரிலீசுக்கு தயாராக இருக்கின்ற நிலையில் இவர் தற்போது கொரில்லா, ஜிப்சி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ஜீவா சினிமா வாழ்க்கையின் நிலையை குறித்து பேசும்போது... "நான் பெரிய நட்சத்திரம் கிடையாது. அதே நேரத்தில் மோசமான படங்கள் பண்ணும் நடிகரும் கிடையாது. இப்போதைய சூழலில் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையில்லை. ஓப்பனிங் காட்டுவதற்கும், பால், கூழ் ஊத்துறதுக்கும், சில நல்ல வி‌ஷயங்களை பண்ணுவதற்கும் ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதை இனி பண்ணமுடியாது. இது டிஜிட்டல் உலகம். ரசிகர் மன்றங்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும். எனக்கு தற்போது 34 வயது ஆகிவிட்டது. இன்னும் சில வருடங்கள் சினிமாவில் நல்லவிதமாக இருந்துவிட்டு ஓய்வு ஆனாலும் ஆகிவிடுவேன். இப்பொழுதே என்னைக் கலாய்க்கிறார்கள். 40 வயதுக்குப் பிறகு நான் ஹீரோயின்கூட ஆடிக்கிட்டு இருந்தா இன்னும் மோசமா கலாய்ப்பார்கள்" என்றார். ஜீவாவின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்