Skip to main content

"இதை விட்டா வேற வழியில்லை" - ரசிகரின் கருத்துக்கு இளையராஜா பதில்

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

ilaiyaraaja reply for fans question

 

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது  உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். சமீபத்தில் இவர் தனது 80வது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதனை முன்னிட்டு சென்னை மற்றும் கோவையில் இளையராஜா தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக மதுரையில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

 

இந்நிலையில் ட்விட்டரில் இளையராஜா ரசிகர்களின் பல கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், "கொஞ்சம் மழை வந்தால் போதும், மெட்ராஸ் மக்களுக்கு உடனே வெங்காய பஜ்ஜி, டீ மற்றும் ராஜா பாடல் என்று பதிவு செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த இளையராஜா, "எதாவது ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்றால் என்னுடைய பாட்டு உங்களுக்கு ஞாபகம் வரும். அல்லது ஏதாவது ஒரு பாட்டு ஞாபகம் வந்தது என்றால் உங்களுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது சம்பவம்  அதோடு தொடர்புடையதாக இருக்கும். உலக ரசிகர்களுக்கு இதை விட்டா வேற வழியும் இல்லை" எனப் பதிலளித்தார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்