Skip to main content

‘ஹ்ரிதயம்’ பட இயக்குநரின் அடுத்த பட ட்ரெயிலர் வெளியீடு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Hridayam' director's next trailer release!

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் ‘ஹ்ரிதயம்’ படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன் பாடகர், நடிகர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ஹ்ரிதயம் படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இளைஞர்களின் கல்லூரி காதலையும், அதற்கு பிந்தைய வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் வெளியான பிறகே கூடுதல் வரவேற்பை பெற்றது.

‘ஹ்ரிதயம்’ படத்தை தொடர்ந்து, அதே கூட்டணியை உருவாக்கி இயக்குநர் வினித் ஸ்ரீனிவாசன், ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், நிவின் பாலி உள்ளிடோர் நடித்துள்ளனர். விசாக் சுப்பிரமணியன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஹ்ரிதயம் படத்தைப் போலவே, இப்படத்தில், சென்னையின் வாழ்வியலை காட்சி படுத்தியிருப்பதாக டீசரில் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தை வரும் ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஹ்ரிதயம்'  படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பாலிவுட் தயாரிப்பாளர் 

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Hridayam Hindi Tamil Telug remake rights acquired karan johar

 

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் 'ஹ்ரிதயம்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இளைஞர்களின் கல்லூரி காதலையும், அதற்கு பிந்தைய வாழ்க்கையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றாலும், ஓடிடியில் வெளியான பிறகே கூடுதல் வரவேற்பை பெற்றது. அத்துடன் 'ஹ்ரிதயம் மலையாள படம் என்றாலும் கூட அதில் சென்னையின் அழகையும், வடசென்னையின் வாழ்வியலையும் அப்படியே காட்டியதற்காக ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள்   மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது. 

 

இப்படத்தின் மலையாள வெற்றியை தொடர்ந்து பிற மொழிகளில் தயாராகவுள்ளது. இதன் ரீமேக் உரிமையை பெறுவதற்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் 'ஹ்ரிதயம்  படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிக்கான ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகரும், ஃபாக்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து  கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் கரண் ஜோகர் தற்போது வெளியிட்டுள்ளார். விரைவில் ரீமேக் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

 

Next Story

மகன் படத்துக்காக ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த மோகன் லால் 

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

mohanlal talk about hridayam movie

 

பிரபல மலையாள எழுத்தாளரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் 'ஹ்ரிதயம்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மலையாள பிரபலங்களின் வாரிசுகள் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு சினிமா விமர்சகர்களிடம் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. 

 

ad

 

இந்நிலையில் இப்படத்தை பார்த்து பாராட்டிய மோகன் லால் தனது சமூக வலைதள பக்கத்தில், "பிரியதர்ஷன், ஸ்ரீனிவாசன் மற்றும் என்னுடைய குழந்தைகள் அனைவரும் இப்படத்தில் இதயபூர்வமாக இணைந்துள்ளனர். இப்படம் நம் இதயத்திற்கு நெருக்கமான ஒரு படமாக இருக்கும். இப்படம் உங்கள் அனைவருக்கும் உற்சாகத்தை தரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன். சினிமாவைச் சேர்ந்த ஒருவனாக நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். சினிமா துறை இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தத் தருணத்தில் இயன்றவரை கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.