Skip to main content

"மிகவும் உற்சாகத்தை தருகிறது" -'தனுஷ் 43' படத்தின் அப்டேட் தந்த ஜி.வி. பிரகாஷ்

Published on 02/12/2020 | Edited on 02/12/2020
gv prakash

 

 

நடிகர் தனுஷ், தற்போது தமிழில் கர்ணன் படத்திலும், இந்தியில் அக்‌ஷய் குமாரோடு ‘அத்ராங்கி ரே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் விரைவில் முடிவடைய இருக்கின்றன.

 

இதனைத்தொடர்ந்து தனுஷ், துருவங்கள் பதினாறு, மாஃபியா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயர் சுட்டப்படாத இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, இம்மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், இசைமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்காக 3 பாடல்களை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " தனுஷின் 43வது படத்திற்காக 3 பாடல்கள் முடிந்துவிட்டது. 4 வது பாடலின் ரெக்கார்டிங்கை தொடங்கியுள்ளேன். பாடல்கள் வந்துள்ள விதம் மிகவும் உற்சாகத்தை தருகிறது.  உறுதியான  ஒரு ஆல்பத்திற்கு தயாராகுங்கள்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்