Skip to main content

"தனித்தனியாலாம் சொல்ல முடியாது" - நடிகர் கவுண்டமணி

Published on 14/05/2022 | Edited on 14/05/2022

 

goundamani talk about isari velan

 

திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி. கணேசனின் தந்தையும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐசரிவேலனின் 35ம் ஆண்டு நினவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அவரது மார்பளவு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஐசரிவேலனின் சிலையை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர் கவுண்டமணி, இயக்குநர் ஆர்.கே செல்வமணி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் பேசிய கவுண்டமணி, "என்ன பேசுறதுன்னே தெரியல, மேடைக்கு முன்னால் இருக்கும் அத்தனை பேருக்கும், மேடையில் இருப்பவர்களுக்கும் என்னால் தனித்தனியே நன்றி சொல்ல முடியாது. அது ரொம்ப நேரமாகும். அதுனால எல்லோருக்கும் ஒரே நன்றி. ஐசரி கணேசன் நீங்கள் என் தந்தையோடு நெருங்கி பழகி இருக்கிறீர்கள். அதனால் இந்த விழாவிற்கு கட்டாயம் வரவேண்டும் என்றார். இந்த சிலையை பார்க்கும் போது என்ன நியாபகம் வருகிறது என்றால் அவரும் நானும் நெருங்கி பழகியதை ஒரு நாள் இரண்டு நாள் அல்ல மாத கணக்கில் சொல்ல வேண்டும். நானும் ஐசரி வேலனும் ஒரு நாடகத்தில் இணைந்து நடித்தோம். அது பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்து.

 

இதையடுத்து எம்.ஜி.ஆர் தலைமையில் மூன்று நாடகங்களில் நடித்தோம். அப்படி இருக்கும் பொழுதுதான் ஒரு நாள் ஒரு வெடிகுண்டு விழுந்தது. அது ஐசரி கணேசன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி. அந்த அதிர்ச்சியை எந்நாளும் தாங்க முடியவில்லை, அவரது குடும்பத்தினரால் தாங்க முடியவில்லை. அந்த சமயத்தில் ஐசரி கணேசன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அப்பாவை இழந்த அவர் தனது உழைப்பாலும், திறமையாலும் வானளவு உயர்ந்திருக்கிறார். ஐசரி கணேசன் தற்போது அவர் தந்தைக்கு செய்யும் நன்மை இந்த சிலையை செய்து, அந்த அழகை பார்த்து விட்டார். அவருக்கு எனது நன்றி" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்