Skip to main content

மீண்டும் பாலிவுட் - சர்ப்ரைஸாக அடுத்த பட அறிவிப்பை அறிவித்த தனுஷ்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

dhanush new bollywood movie update

 

அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டாகியுள்ளார் தனுஷ். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை தனுஷின் 'வொண்டர்பார் ஃபில்ம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இதனிடையே தனது 50வது படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை சன் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனுஷே இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்க ஹிமான்ஷு ஷர்மா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கு தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. 

 

தனுஷ், 2013 ஆம் ஆண்டு வெளியான 'ராஞ்சனா' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள தனுஷ், "சில படங்கள் உங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிடும். உண்மையில், அப்படி எங்கள் வாழ்க்கையை மாற்றி படம் ராஞ்சனா" என குறிப்பிட்டுள்ளார். 

 

ராஞ்சனா படத்தை தொடர்ந்து இரண்டாவது இந்தி படமாக பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'ஷமிதாப்' படத்தில் நடித்தார். பின்பு மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'அந்த்ராங்கி ரே' படத்தில் நடித்தார். இப்படம் 'கலாட்டா கல்யாணம்' என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இதையடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ராஞ்சனா படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்