Skip to main content

"இன்னும் எத்தனை நாட்கள் அவர்களை சிரமத்திற்கு ஆளாக்க போகிறோம்?" - சேரன் கேள்வி!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

gshdfhdfh

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான சேரன் கரோனா தொற்று பரவல் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "கரோனா தொற்றை முறியடிக்க மக்கள் அனைவரும் அக்கறையோடு முயல்வதே தீர்வு. என்னதான் அரசும் அரசுத் துறைகளும் முயன்றாலும் தனிமனித சிந்தனையில் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கான முன்னேற்பாடு இல்லாதவரை கரோனா ஆபத்துகளை கடப்பது கடினம். நமக்கு வராது என்ற சிந்தனை யாருக்கும் வேண்டாம்.

 

அத்தியாவசிய தேவைகளுக்கான தொழில் செய்பவர்கள், முன்களப்பணியாளர்கள், மருத்துவத்துறை, போக்குவரத்து துறையில் பணிபுரிவோர், காவல்துறை, செய்திதுறை இவர்கள் எல்லாம் நம் பாதுகாப்புக்காக களத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம் உறவுகள் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அவர்களை இந்த சிரமத்திற்கு ஆளாக்க போகிறோம். ஆகவே நமக்கு எங்கிருந்தோ எல்லாம் கிடைத்துவிடுகிறது என்று கருதாமல் நோயை விரைவில் விரட்டியடிக்க ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. ஆகவே நோய் இருப்பதற்கான காரணம் தெரிந்த உடனே சிகிச்சை எடுங்கள். நோயற்றவர்கள் வராமல் தடுக்க முழுமுயற்சி எடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்