Skip to main content

வேளாண் மசோதாவுக்கு சேரன் கண்டனம்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

cheran

 

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்களுக்குக் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இரண்டு வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு ஒரு பக்கம் ஆதரவும் ஒரு பக்கம் எதிர்ப்பும்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சேரன் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். 

 

அந்தப் பதிவில், "விவசாயிகளின் மீதும் விவசாயத்தின் மீதும் திணிக்கப்பட்டிருக்கும் பேராபத்தான தனியார் நிறுவன ஆதிக்க வியாபார முறை குறித்த மசோதாவை எதிர்க்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். விவசாயத்திற்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் துணைபோகக் கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்