Skip to main content

சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்த இயக்குனர்... பாராட்டு மழையில் கீர்த்தி சுரேஷ் 

Published on 15/05/2018 | Edited on 16/05/2018
irumbu thirai.jpeg

 

 

keerthy suresh


கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  ‘நடிகையர் திலகம்’ கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் நன்றாக நடித்த கீர்த்தி சுரேஷை நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து இப்படத்தை பார்த்த நடிகர் விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளார். இவர்கள் இருவரும் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சாவித்ரியின் திரைப்பயணத்தில் முக்கியமான பலர் பற்றி படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவரான இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்-வும் தற்போது கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளார். அவர் தன் முகநூல் பக்கத்தில் கீர்த்தியை பாராட்டி பதிவிட்டிருந்ததாவது... "பலரும் நீங்கள் சாவித்ரியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா, எனக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் எடுத்ததில்லை. ஆனால், இப்போது எடுத்துவிட்டேன்" என எழுதி, சாவித்ரி வேடத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

சார்ந்த செய்திகள்