Skip to main content

'பீஸ்ட்' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி இதுவா? 

Published on 18/01/2022 | Edited on 18/01/2022
gtrhreh

 

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு டப்பிங் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் 'பீஸ்ட்' படத்தில் 'கில்லி' பட பாடல் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியானது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கபடி கபடி பாடல் இடம் பெற்றதைப்போல பீஸ்ட் படத்தில் "அர்ஜுனரு வில்லு..." பாடல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்