Skip to main content

“இதை எடுத்ததற்கே மிகப்பெரிய பார்ட்டி வைக்க வேண்டும்” - ஆர்யா

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

arya speech in the village web series trailer event

 

ஆர்யா நடித்துள்ள முதல் வெப் சீரிஸில்‘தி வில்லேஜ்’. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இதில் திவ்யா பிள்ளை கதாநாயகியாக நடித்துள்ளார். இத்தொடர் கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. இந்த சீரிஸ் பிரைம் ஒடிடி தளத்தில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில்,  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாக உள்ளது. இந்த சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.

 

இயக்குநர் மிலிந்த் ராவ் பேசியதாவது, “இது தமிழுக்கு மிகவும் புதிது. கிராஃபிக் நாவலை இங்கு யாரும் திரைப்படைப்பாக செய்ததில்லை. ஆர்யா சாருக்கும் மிகப்புதியது. இதை அவர் செய்ய ஒத்துக்கொண்டது பெரிய விசயம். கிராஃபிக் நாவலை தமிழ்நாட்டில், தூத்துக்குடி அருகில் நடக்கும் கதை போல நமக்கு நெருக்கமாக,  நம் மொழியில் உருவாக்கியுள்ளோம். முழுக்க நைட் கால் ஷீட்  தான் அதனால் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தனர். நடிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இசை இந்த சீரிஸிற்கு மிக முக்கியம் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அட்டகாசமான  இசையை தந்துள்ளார். விஷுவலும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

 

ஆர்யா பேசியதாவது, “அபர்ணா இல்லாமல் அமேசான் ப்ரைமில் எந்த புராஜெக்டும் ஓகே ஆகாது. அவர் இதை ஓகே செய்திருக்கிறார். அதுவே பெரிய விசயம். இங்கு நிறைய ஒரிஜினல்ஸ் வர அவர் தான் காரணம் அவருக்கு நன்றி. மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷுவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு  எடுக்க முடியுமா?, சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை ப்ரைமில் ஒகே செய்தார்கள், மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார், இதை எடுப்பது மிகக்கடினம். ப்ராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது. 

 

3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்ட்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிஸோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார்.  விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து, உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி” என்றார்.  

 

 


 

சார்ந்த செய்திகள்