Skip to main content

சூர்யா இடத்தை நிரப்பும் அருண் விஜய்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

Arun Vijay to replace Suriya in Balas Vanangaan

 

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த படம் 'வணங்கான்'. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மூன்றாவது முறையாக பாலா மற்றும் சூர்யா கூட்டணி உருவாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்தது.

 

இதையடுத்து 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா அறிவித்தார். தொடர்ந்து சூர்யா தரப்பும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பு வெளியிட்டது. 'வணங்கான்' படத்தில் சூர்யா விலகினாலும் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என பாலா தெரிவித்திருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் அதர்வா நடிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது.

 

இந்த நிலையில் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளார். விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அருண் விஜய் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும்  'அச்சம் என்பது இல்லையே' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்