Skip to main content

அனபெல்லுக்காக அரண்மனை கட்டி காத்திருக்கும் விஜய் சேதுபதி... வெளியானது 'அனபெல் சேதுபதி' ட்ரைலர்!

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

Annabelle Sethupathi

 

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அனபெல் சேதுபதி'. இப்படத்தில் யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது.

 

இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள காமெடி மற்றும் ஹாரர் கலந்த இந்த ட்ரைலர், தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்