Skip to main content

அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் அமைகின்றன - அஞ்சலி பெருமிதம் 

Published on 19/03/2018 | Edited on 20/03/2018
anjali


நடிகர் ஜெய்யுடன் நடித்த பலூன் படத்தை தொடர்ந்து தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் நடித்துள்ளார் நடிகை அஞ்சலி. மேலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் காளி படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் முதல் பாகத்தை போலவே கீதாஞ்சலி படத்தின் 2ஆம் பாகத்திலும் பேயாக நடிக்க உள்ளார். இதை பற்றி அஞ்சலி பேசியபோது...."தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளேன். எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் அமைகின்றன. ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகளும் கிடைக்கிறது. பேய் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.ஏற்கனவே தெலுங்கில் வெளியான கீதாஞ்சலி என்ற பேய் படத்தில் நடித்து இருக்கிறேன். அதில் எனக்கு இரண்டு வேடம். ஒரு கதாபாத்திரத்தில் பேயாக வந்து ரசிகர்களை பயமுறுத்தினேன். அந்த படம் நன்றாக ஓடியது. எனக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. இன்றைய தலைமுறையினர் திகில் படங்களை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு நிறைய பேய் படங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறது. கீதாஞ்சலி பேய் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடக்கிறது. அந்த படத்திலும் நான் பேயாக நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லுவது என்னவென்றால்...' - அஞ்சலி 

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக நாடோடிகள் 2, லிசா, சிந்துபாத் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தன்னை சுற்றி வரும் வதந்திகள் குறித்து நடிகை அஞ்சலி பேசியபோது...

 

Anjali

 

"நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை. திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும். நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை" என்றார்.

 

Next Story

"பேரன்பு படத்தின் ஒவ்வொரு காட்சியும் நிஜம்"

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

42 வயது சிறப்பு பெண் குழந்தையின் தாய் மரியா, தன் குழந்தையின் நிலையை கண்டபிறகு அதைக்குறித்து தேடிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருகட்டத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான அமைப்புகளில் பணியாற்றி, பின் தனியாக சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியையே துவங்கியிருக்கிறார். தன் மகளுடன் பேரன்பு படத்தை பார்த்த மரியா, திரைப்படம் குறித்தும் அதன் மீது வைக்கப்படுகின்றன விமர்சனங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட நேர்காணல் இது.