Skip to main content

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கௌரவிக்கும் ஆந்திர அரசு..

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

spb

 

"பாடு நிலா பாலு"  என  அன்போடு அழைக்கப்படும் அளவிற்கு, தனது தேன்மதுரக் குரலால், ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி, கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார்.

 

ஆந்திர மாநிலம் நெல்லூரைப் பூர்விகமாகக் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஏற்கனவே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், எஸ்.பி.பாலசுப்ரமணியதிற்கு 'பாரத ரத்னா' வழங்கவேண்டுமென பிரதமருக்குக் கடிதம் எழுதினார். தற்போது, ஆந்திர அரசு, நெல்லூரில் உள்ள இசை மற்றும்  நாட்டியப் பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியதின் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக, ஆந்திராவின் தொழில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான கௌதம் ரெட்டி, தனது ட்விட்டர் பதிவில், "மாபெரும் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளியின் பெயரை, 'டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நாட்டியப் பள்ளி' என மாற்ற அரசு முடிவு செய்துள்ளது" எனக் கூறியுள்ள்ளார். 

 

இதற்கு நன்றி தெரிவித்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியதின் மகன் சரண், இந்த கௌரவத்திற்காக, ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன் மோகனுக்கும் நன்றியுடன் இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்