Skip to main content

'ஏழு கடலும் என் பேர் சொன்னால் உனக்கென்ன...' - அலறவிடும் அஜித்

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

ajith world tour update

 

துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். லைகா தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை நீரவ் ஷா மேற்கொள்கிறார். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் சுற்றை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பயணம் செய்து முடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட சுற்றுப் பயணத்தை ‘அஜித் 62’ படத்தை முடித்துவிட்டுத் தொடர்வதாகத் திட்டமிட்டிருந்தார். ஆனால் படம் தாமதமாகி வருவதால் பயணத்தை இப்போதே தொடங்கி மேற்கொண்டு வருகிறார். 

 

இந்த உலக பயணத்தில் முதற்கட்ட பயணமாக இந்தியா, நேபால், பூட்டான் உள்ளிட்ட நாடுகளைச் சுற்றி முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட பயணம் வருகிற நவம்பரில் தொடங்கவுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்த்ரா தெரிவித்துள்ளார். மேலும் முதற்கட்ட பயணத்தில், "சவாலான நிலப்பரப்புகளில் தீவிர வானிலை நிலை உள்ள சூழலை எதிர்கொண்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்