Skip to main content

'வலிமை' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? உண்மையை வெளியிட்ட போனி கபூர்

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

Ajith Valimai movie crosses Rs 200 crores box office

 

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்திருந்தார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ளது. 

 

இதனிடையே படத்தின் வசூல் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் உண்மையான வசூலை வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான வலிமை படம் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  இப்படம் நாளை ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்