Skip to main content

ஆதிபுருஷ் படத்தை விமர்சித்த ரசிகர் - திரையரங்கு வாசலில் சரமாரித் தாக்குதல்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

adipurush theatre issue

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் 3டியில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர் . 

 

ரிலீசுக்கு முன்பு படக்குழு கூறியது போல் இப்படம் திரையிடும் சில திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப்பட்டுள்ளது. அப்படி ஒரு திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கையில் ஜன்னல் வழியே குரங்கு ஒன்று எட்டிப் பார்த்தது. அதை பார்த்த ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீராம்...ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிட்டனர். 

 

இந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் ரசிகர் ஒருவர் செய்தியாளர்களிடம் படத்தை விமர்சித்துப் பேசிக் கொண்டிருந்தார். உடனே அங்கிருந்த ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து வாக்குவாதம் முற்றி விமர்சித்த ரசிகரை சிலர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கிவிட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்திக் கட்டுப்படுத்தினர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் மோசமான விமர்சனத்தையே வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்