Skip to main content

பிரபல நடிகையின் இன்ஸ்டா, ட்விட்டர் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள்...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

varalakshmi

 

 

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை வரலக்‌ஷ்மி. பாலியல் வன்முறை, கரோனா விழிப்புணர்வு, சக்தி அமைப்பு உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று இரவு அவரது சமூக வலைதள பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதுகுறித்து நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு திருடப்பட்டு விட்டன. என்னால் இன்னும் அவற்றை மீட்க முடியவில்லை. கூடிய விரைவில் என்னுடைய கணக்குகளை மீட்பதற்காக அந்தத் தளங்களின் அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். ஆனால், அதற்கு சில நாட்கள் ஆகலாம்.

 

என்னைப் பின்தொடர்பவர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் அடுத்த சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களிலிருந்து மெசேஜ் வந்தால், தயவுசெய்து கவனமாக இருக்கவும்.

 

என்னுடைய கணக்குகளை மீட்டதும் நான் அதை உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. விரைவில் உங்களை ஆன்லைனில் சந்திக்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்