Skip to main content

பட வாய்ப்பு இல்லை... எஸ்.ஜே. சூர்யா பட நடிகை எடுத்த திடீர் முடிவு...

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

தெலுங்கு சினிமாவின் உட்சநட்சத்திரமான பவண் கல்யாணை வைத்து கடந்த 2010ஆம் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா இயக்கியப் படம் புலி. இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் இங்கிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட நிகிஷா படேல். இவருடைய பூர்விகம் குஜராத் மாநிலமாக இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் லண்டனில்தான். 
 

nikesh patel

 

 

புலி படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் பாஸுடன் தலைவன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருந்தார். இதன்பின் நிகிஷா படேலுக்கு தென்னிந்திய படங்களில் கிளேமருக்காக மட்டுமே படவாய்ப்புகள் கிடைத்தன. அதை வைத்து தெலுங்கு, தமிழ், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட்  வலம் வந்தார். 

சமீபத்தில்கூட சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவான மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஒரு கிளேமர் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது கைவசம் இருக்கும் 7 படங்களில் நடித்து முடித்துவிட்டு, லண்டனுக்கே சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம். ஏற்கனவே லண்டனில் பிபிசியில் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த நிகிஷா மீண்டும் அதே துறையில் கவனம் செலுத்தலாம் என்று தீர்மானித்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்