Skip to main content

'மாமன்னன்' படப்பிடிப்பில் இணைந்த பிரபலம்... வைரலாகும் புகைப்படம்

Published on 15/03/2022 | Edited on 15/03/2022

 

actor vadivel joins maamannan shooting

 

'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில்  இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டுள்ளார். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வடிவேலுவை மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'  படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்