Skip to main content

கமலிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

actor rajinikanth inquired about kamalhassan health

 

நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல் சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பரான கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் விரைவில் குணமடைந்து தங்கள் பணியைத் தொடர வேண்டும் எனத்  தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்