Skip to main content

‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’- கமல்ஹாசன் உருக்கம்!

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

Actor KamalHasan condolence to Dancer Birju Maharaj

 

புகழ்பெற்ற கதக் நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

 

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன், தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் பிர்ஜு மகராஜ். நேற்று பின்னிரவு அவர் தனது டெல்லி வீட்டில் இருந்தபோது, திடீர் உடல் நலக்குறை ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அவரின் குடும்பத்தாரும், அவரது ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

 

நடிகர் கமலின் விஸ்வரூபம் படத்தின் ‘உன்னைக் காணாது நான்’ பாடலுக்காக தேசிய விருதை வென்றவர் பிர்ஜு மகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. பிர்ஜு மகராஜுக்கு சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பிரச்சனை இருந்ததாகவும், அதற்காக அவர் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.  

 

இவரது மறைவுக்கு நடனக் கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பிர்ஜு மகராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும், விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்