Add1
logo
பாகிஸ்தானின் தேவாலயத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்! - 8 பேர் உயிரிழப்பு || கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது || சுதந்திரத்திற்குப் பின் முதன்முதலாக மின்வசதி பெற்ற கிராமம்! || நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்! || கட்சி பிரமுகர்களை விருந்துக்கு அழைத்துள்ள ராகுல் || ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி || கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல் || வாக்கு எந்திரங்களை ஹேக் செய்ய பொறியாளர்கள்! - பாஜக மீது ஹர்தீக் பட்டேல் குற்றச்சாட்டு || முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை! || வங்கதேசிகளை சட்டவிரோதமாக கடத்திய மலேசிய அதிகாரிகள் 600 பேர் பணியிட மாற்றம்! || தேசிய அளவிலான மோட்டார் வாகன பந்தயம் || அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் பேட்டி || டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை! ||
11, நவம்பர் 2017
ஜெ.தீபா அணி மண்டல பொருப்பாளர் ராஜினாமா
......................................
பாளை சிறையில் முகிலன் தொடர் உண்ணாவிரதம்
......................................
கலைஞரிடம் நலம் விசாரித்த நல்லக்கண்ணு!
......................................
இன்றைய(11.11.2017)டாப்-10 நிகழ்வுகள்!
......................................
தோண்ட தோண்ட சிலைகள்; பழஞ்சூரில் பரபரப்பு(படங்கள்)
......................................
பேருந்துகளின் டயர்களையும், பயணிகளையும் கூட அடமானம் வைத்து விடுவார்களோ? ஸ்டாலின்
......................................
பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த பாண்டியர், சோழர் காலத்துக் நாணயங்கள்!
......................................
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளில் வெளி மாநிலத்தவர் நுழைந்தது எப்படி? கி.வீரமணி
......................................
3 நாள் ரெய்டு! வெற்றியா? தோல்வியா? (EXCLUSIVE)
......................................
1.34 கோடி பக்கங்கள், 700 இந்திய பணமுதலைகள்...
......................................
3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை! (படங்கள்)
......................................
இ.பி.எஸ்.சுக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் மோடி கொடுத்த டோஸ்!
......................................
கமல் 30 கோடி ரூபாய் கேட்டாரா - உண்மை என்ன?
......................................
குஜராத் தேர்தலை எண்ணியே ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை; மு.க.ஸ்டாலின்
......................................
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
......................................
வருமான வரி சோதனைக்குள்ளானவர்கள் மாமியார் வீட்டுக்குதான் செல்வார்கள்: ஈவிகேஎஸ் பேட்டி
......................................
சிம்பு பாடலை எதிர்த்து பாஜக போராட்டம்?
......................................
மத்திய அரசின் நெருக்கடியால் தினகரன் பக்கம் குவியும் ஆதரவு: தமிமுன் அன்சாரி
......................................
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். மேல் எந்த நேரத்திலும் வழக்குகள் பாயலாம்: விஜயதாரணி
......................................
மோடியின் தமிழக வருகை உள்நோக்கம் நிறைந்தது: விஜயதாரணி பேட்டி
......................................
சொத்துக்கள் அடமானம்: போக்குவரத்துக் கழகங்களை மூட தயாராகிறாதா அரசு? அன்புமணி கேள்வி
......................................
குஜராத் பீதியில் குறைந்தது ஜிஎஸ்டி!
......................................
15கிலோ தங்கம் பறிமுதல்; ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்..!
......................................
வருமான வரி சோதனையை நான் எதிர்க்கவில்லை; வரவேற்கிறேன்: தினகரன் பேட்டி
......................................
தமிழ் சினிமா நூற்றாண்டு – 2017, குறும்பட போட்டி!
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, நவம்பர் 2017 (10:24 IST)
மாற்றம் செய்த நாள் :11, நவம்பர் 2017 (11:13 IST)


தமிழ் சினிமா நூற்றாண்டு – 2017,  குறும்பட போட்டி!

செய்திக் குறிப்பு


லயோலா கல்லூரி, மகளிர் கிறித்தவக் கல்லூரி, டிஜி வைஷ்ணவ் கல்லூரி ஆகியவற்றின் காட்சித் தொடர்பியல் துறைகள் வினைத்தொகை அறக்கட்டளையுடன் இணைந்து வரும் டிசம்பர் 5 – 8 தேதிகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. நிகழ்ச்சி குறித்த விவரங்கள், http://tccc2017.com என்ற தளத்தில் காணக் கிடைக்கும்.  

“தமிழ் சினிமா நூற்றாண்டு – 2017” நிகழ்வின் சார்பில் “தமிழ் சினிமா – நூற்றுக்கு நூறு” என்ற
தலைப்பிலான குறும்பட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

போட்டிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

குறும்பட போட்டி விவரங்கள்


வருங்காலச் சினிமாக் கலைஞர்களில் திறன் மிக்கவர்களை அடையாளம் காணும் நோக்கில் தமிழ் சினிமா நூற்றாண்டு 2017 நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் காட்சித் தொடர்பியல் துறையில் பயிலும் மாணவர்கள், பயின்ற மாணவர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுக்கான குறும்படப் போட்டிகளை அறிவிக்கின்றோம். மேற்குறித்த மூன்று தரப்பினரும் தனிப் பிரிவுகளில் பங்குபெறலாம். ஒவ்வொரு பிரிவினரில் பங்கேற்போருக்கும் தனிப் பரிசுகள் வழங்கப்படும். குறும்படங்களைச் சமர்ப்பிக்கவேண்டிய இறுதி நாள் 21.12.2107.

பொது விதிகள்

குறும்படங்கள் 3 – 5 நிமிடங்களுக்குள் இருக்கவேண்டும் (தொடக்கத் தலைப்புகள், படத்தின் இறுதியில் வரும் பங்குபெற்ற கலைஞர்களின் விபரங்கள் உட்பட 3 நிமிடங்களுக்குக் குறையாமல், 5 நிமிடங்களை மிகாமல் இருக்கவேண்டும்).

குறும்படங்கள் மட்டுமே ஏற்கப்படும். ஆவணப்படங்கள், கார்ட்டூன்கள் ஏற்கப்படமாட்டாது.

ஆக்ஷன், அட்வென்சர், நகைச்சுவை, க்ரைம், ட்ராமா, ஹாரர், மியூசிக்கல் அல்லது ரொமான்ஸ் போன்ற எவ்வகைப்பட்டவையாகவும் இருக்கலாம்.  

1. சமூக நீதி, 2. பெண் – ஆண் – மூன்றாம் பாலினர் சமத்துவம், 3. சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பொருள் குறித்த குறும்படங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

இப்போட்டிக்கென தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

போட்டிகளுக்கு அனுப்பட்ட குறும்படங்களின் பகுதிகளையோ முழுமையாகவோ நிகழ்வு நடப்பதற்கு முன்பாகவோ, நடந்து முடியும் வரையிலோ எந்த சமூக ஊடகங்களிலோ இணையத்திலோ வேறு வடிவங்களிலோ வெளியிடக்கூடாது.

ஒருவர் இரண்டு குறும்படங்களுக்கு மேல் சமர்ப்பிக்கக்கூடாது.

போட்டிகளில் கலந்துகொள்வதற்கு பதிவுக் கட்டணமோ நுழைவுக் கட்டணமோ ஏதும் இல்லை.  

போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்படும் மூன்று திரைப்பட இயக்குனர்கள் சிறந்த குறும்படங்களைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

சமர்ப்பிக்கப்படும் குறும்படங்கள் சிறந்த தொழில்நுட்பத் திறமுடையவையாக இருக்கவேண்டும். தொழில்நுட்பக் குறைபாடுகள் (மோசமான அல்லது பொருந்தாத ஒலியமைப்பு, மோசமான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இன்னபிற) உள்ள குறும்படங்கள் ஏற்கப்படமாட்டாது.

சமர்ப்பிக்கட்ட குறும்படங்களில் மிகச் சிறந்தது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இப்போட்டியில் கலந்துகொள்ளும் குறும்படங்களின் தேர்வு தொடர்பாக சர்ச்சைகள் ஏதும் எழுமெனில் ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது. போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரும் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டே தமது ஆக்கங்களை அனுப்பவேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் படங்களில் சிறப்பானவை நிகழ்வின் மாலை அமர்வுகளில் திரையிடப்படும்.   

வடிவமும் கோப்பு வரையறைகளும்

ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம்கள்
1920 X 1080 (16 X 9 திரையளவு)
ஹெச்  டி க்விக் டைம் கோப்பு
ஒலியளவு 48khz ஸ்டீரியோ

குறும்படங்கள் மேற்கண்ட வரையறைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். 3 நிமிடங்களுக்குக் குறையாமலும் 5 நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்கவேண்டும். தொடக்கத் தலைப்புகள், இறுதியில் வரும் பங்குபெற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இக்கால அளவிற்குள் அடங்கியிருக்கவேண்டும்.

குறும்படங்களை பென் ட்ரைவ், ஹார்ட் ட்ரைவ் அல்லது இரண்டு டிவிடி பிரதிகளாக குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

எந்தப் பிரிவில் சமர்ப்பிக்கப்படுகிறது (மாணவர்/முன்னாள் மாணவர்/மாணவர் அல்லாத தனிநபர்) என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.

ஒவ்வொரு பிரிவுக்குமான விதிகள்

குறும்படப் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறும். அவை பின்வருமாறு: 1) காட்சித் தொடர்பியல் மாணவர்கள் 2) காட்சித் தொடர்பியல் படிப்பை முடித்து 2 வருடங்கள் ஆனவர்கள் 3) தமிழகம் மற்றும் புதுவையில் வாழும் தனிநபர்கள்.

பிரிவு 1: மாணவர்கள்


தமிழகம் மற்றும் புதுவையில் அமைந்துள்ள கல்லூரிகளில் காட்சித் தொடர்பியல்/வெகுமக்கள் தொடர்பியல் துறையில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் அல்லது இவற்றுக்கு இணையான திரைப்படம் தொடர்பான பிற தகுதியுடைய நிறுவனங்களில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் மட்டுமே இப்பிரிவில் பங்குபெறலாம்.

இப்பிரிவில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், தமது படிப்பு தொடர்பான விவரங்களுடன், துறைத் தலைவரின் கையொப்பமிட்ட அத்தாட்சிச் சான்றிழுடன் விண்ணப்பிக்கவேண்டும்.

தமது படிப்பின் பகுதியாகச் செய்யப்பட்ட ஆக்கங்களை போட்டிக்கு அனுப்பக்கூடாது. அத்தகைய ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பிரிவு 2: முன்னாள் மாணவர்கள்

தமிழகம் மாற்றும் புதுவையில் அமைந்துள்ள கல்லூரிகளில் காட்சித் தொடர்பியல்/வெகுமக்கள் தொடர்பியல் துறையில் அல்லது இவற்றுக்கு இணையான திரைப்படம் தொடர்பான பிற தகுதியுடைய நிறுவனங்களில் 2 ஆண்டுகளுக்கு உட்பட்டு படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் மட்டுமே இப்பிரிவில் பங்குபெறலாம்.

இப்பிரிவில் விண்ணப்பிவர்கள் படிப்பை முடித்த விவரங்களைத் தக்க சான்றிதழ்களோடும் தாம் பயின்ற நிறுவனத்தின் துறைத் தலைவர் அல்லது கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட அத்தாட்சி சான்றிதழுடனும் விண்ணப்பிக்கவேண்டும்.

குறும்படங்கள் இந்நிகழ்ச்சிக்காகவே தயாரிக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். ஏற்கனவே தயாரிக்கப்பட்டவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பிரிவு 3: தனிநபர்கள்

தமிழகம் மற்றும் புதுவையில் வசிக்கும், தமிழை தாய்மொழியாகக் கொண்ட 30 வயதிற்குட்பட்ட தனிநபர்கள் இப்பிரிவில் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தமது தற்போதைய/நிரந்தர முகவரி, வயது குறித்த இரண்டு அத்தாட்சி சான்றிதழ்களுடன் தமது தற்போதைய பணி குறித்த அத்தாட்சிகளையும் சமர்ப்பிக்கவேண்டும்.

தனிநபர்கள் அல்லது குழுவாக இருப்பின் ஆக்கத்திற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் தனிநபர்கள் இப்பிரிவில் கலந்துகொள்ளலாம். ஆக்கங்கள் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் அல்லது ஸ்டூடியோக்கள் அல்லது தொலைக்காட்சி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையாகவோ, நிதி உதவி பெற்றவையாகவோ, தயாரிப்பில் உதவி செய்யப்பட்டவையாகவோ இருக்கக்கூடாது.

பரிசுகள்

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவருக்கு ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள வீடியோ காமெரா பரிசாக அளிக்கப்படும். இரண்டாம் பரிசு அல்லது ஆறுதல் பரிசு போன்றவை ஏதும் இல்லை.

ரீமிக்ஸ் போட்டிகள்


மாணவிகளுக்கான தனிச்சிறப்பான போட்டிகள்

1.    மெட்டை மாற்றியமைத்தல்

அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தில் இடம்பெறும் “அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான்” என்ற பாடல் அல்லது கணவனே கண் கண்ட தெய்வம் திரைப்படத்தில் இடம்பெறும் “உன்னைக் கண் தேடுதே“ என்ற பாடல்.

2.    பாடலை மாற்றி எழுதி புதிய இசையமைத்தல்

தேன் நிலவு திரைப்படத்தில் இடம்பெறும் “பாட்டுப் பாடவா பார்த்து பேசவா“ என்ற பாடல் அல்லது அம்பிகாபதி திரைப்படத்தில்இடம்பெறும் “கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா“ என்ற பாடல்.

3.    அனைத்து மாணவர்களுக்குமான பிரிவு

நல்ல தம்பி திரைப்படத்தில் இடம்பெறும் “விஞ்ஞானத்த வளர்க்க போரேண்டி“ என்ற பாடலில் குறிப்பிடப்படும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பலவும் அன்றாடப் புழக்கத்திற்கு வந்துவிட்ட பின்னர் பெண் விடுதலையின் நிலை என்ன என்ற நோக்கில் அப்பாடலை மாற்றி எழுதி, இசையமைப்பையும் மாற்றியமைக்கவேண்டும்.

பரிசுகள்

இம்மூன்று போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ. 25,000 பரிசாக வழங்கப்படும்.

போட்டிகளுக்கு உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கான இறுதி நாள்: 21.11.2017


ஆக்கங்களை அனுப்பவேண்டிய முகவரி:

கல்லூரி முதல்வர்
லொயோலா கல்லூரி
நுங்கம்பாக்கம்
சென்னை – 600 032.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :