Add1
logo
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி தங்கம் பறிமுதல் || போலி ஊழல் தடுப்பு விசாரணை ஆணையம் நடத்தியவர் கைது || நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு || கோவிலம்பாக்கத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் || நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணை குறித்து: சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி || புதுச்சேரியில் 13 மாத ஊதிய நிலுவையை வழங்க கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் முற்றுகை || ஆபாச நடனத்தை தடுத்து நிறுத்துங்கள்: மேடை நாடக கலைஞர்கள் ஆட்சியரிடம் புகார் || வங்கதேச பிரதமரை கொல்ல முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை || தூத்துக்குடி அணியை வீழ்த்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் || போடி - ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் (படங்கள்) || கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!! || சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) ||
12, ஜனவரி 2017
லாலு பிரசாத் யாதவிற்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்
......................................
கிருஷ்ணா நதி நீர் விவகாரம்: கூடுதல் நீர் தருமாறு வலியுறுத்தினேன் ஒ.பன்னீர்செல்வம் பேட்டி
......................................
சிம்புவை நேரில் சந்தித்து சீமான் வாழ்த்து (படங்கள்)
......................................
கோவையில் ரேக்ளா வண்டிகளுடனும், ஜல்லிகட்டு காளைகளுடனும் ஊர்வலம்
......................................
பாரிமுனையில் பஸ்சில் மாணவர்கள் மோதல்
......................................
விவசாயிகளின் இறப்புக்கு அரசுகளே காரணம்: சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இளைஞர்களோடு கை கோர்க்கும் பொது மக்கள்: கொந்தளிக்கும் தென் மாவட்டங்கள்
......................................
சசிகலாவை நெருங்கவிடாமல் தடுக்கும் மறைந்திருக்கும் இருவர் (படம்)
......................................
171 தொகுதிகள்- மு.க.ஸ்டாலின் கணக்கு
......................................
பிரேமலதாவுக்கும் முக்கிய பதவி!
......................................
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் சசி குடும்பம்
......................................
பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய பள்ளி மாணவிகள்
......................................
சல்லிக்கட்டு - இளைஞர்கள் திரண்டது எப்படி?
......................................
மாணவா்களின் மனித சங்கிலி போராட்டம்! (படங்கள்)
......................................
கொத்தமங்கலத்தில் தீபா ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
......................................
பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழைத் தார்கள் ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை (படம்)
......................................
புஷ்பாவின் கடிதம்- இருளடைந்த சசி முகம்
......................................
ராமாயண தரிசன சித்திர கண்காட்சி; பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
......................................
பொங்கலன்று திருவாரூரில் உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
......................................
ஆயிரம் குடும்பத்திற்கு திமுக சார்பில் பொங்கல் பொருட்கள் வழங்கல் (படங்கள்)
......................................
காளைகளின் கொம்புகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்! (படங்கள்
......................................
ஏகாதசி பிரசாதம் ஜெ.வோடு போச்சு!
......................................
தடை அதை உடை: புதுக்கோட்டையில் காளைகளுடன் பேரணி நடத்திய இளைஞர்கள் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி (படங்கள்)
......................................
சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை: மாணவர் அமைப்பினர் கைது
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (15:44 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (15:49 IST)


ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் மாநில ஆட்சியைக் கவிழ்க்க பி.ஜே.பி. இரட்டை வேடமா? கி.வீரமணி



ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் பி.ஜே.பி. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கி, மாநில ஆட்சியைக் கவிழ்க்கலாமா? என்று பி.ஜே.பி. நினைக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று (12.1.2017) நடைபெற்ற - கீழடி தொல்பொருள் ஆய்வை முடக்கியதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

செய்தியாளர்: திராவிடர் நாகரிகத்தை மறைப்பதற்கான முயற்சி நடைபெறுகிறது என்று சொல்கிறீர்கள்; உங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்பீர்களா?

கி.வீரமணி: சட்ட ரீதியான நடவடிக்கையை நீதிமன்றங்களில் நடத்துவோம். சட்டத்திற்கு அப்பாற்பட்டு, அதேநேரத்தில், சட்டத்தை கையில் எடுக்காத - வரம்பிற்குட்பட்டு வெளியில் போராட்டங்களை நடத்துவோம். எனவே, நீதிமன்றத்திலும் இதற்குரிய பரிகாரம் தேடப்படும். அதைவிட மக்களுடைய ஆதரவு இருப்பதை காட்டுவதற்காக, மக்கள் மத்தியிலும் இந்தப்  பிரச்சினையை எடுத்துச் செல்வோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்பற்றி உங்கள் கருத்து....

செய்தியாளர்: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து?

கி.வீரமணி: இப்பொழுது பந்து யாரிடத்தில் இருக்கிறது என்றால், ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும்; சாதகமான தீர்ப்பு  வரும் என்றெல்லாம் சொன்ன பி.ஜே.பி.யினுடைய தோட்டத்திலே பந்து இருக்கிறது. எப்படியும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எப்படியும் நடந்தே தீரும் என்று நம்முடைய முதலமைச்சர் சொல்லியிருக்கிறார், தமிழக அரசின் சார்பாக.

எனவே, இந்த இரண்டு பேருடைய தோட்டத்தில் அந்தப் பந்து இருக்கிறது. அதனை எப்படி அடிக்கப் போகிறார்கள் என்பது மிக முக்கியம். வேண்டுமென்றே இந்த உணர்வு இளைஞர்கள் மத்தியில்கூட மிக அதிகமாக சில நாள்களாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு,  இந்த நிலைக்குச் சரியானப் பரிகாரம் தேடவில்லையானால், இதனை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் நாங்கள் ஆதரிப்போம் என்று தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர் ஒருவர் சொல்கிறார் என்றால், அவரே சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துங்கள் என்று மறைமுகமாக சொல்கிறார். அதன்மூலமாக தமிழக அரசிற்கு, ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்குவதற்கு, இதுவே ஒரு சிறந்த திட்டமாக பா.ஜ.க. உருவாகியிருக்கிறதோ என்கிற சந்தேகம், எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, பொதுவானவர்களுக்கும் இருக்கிறது.
எனவே, இதற்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு - மோடி அரசுக்கு உண்டு.  அதேநேரத்தில், இந்த ஆண்டு உறுதியாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று சொன்ன நம்முடைய முதலமைச்சருக்கும் உண்டு.

எனவே, அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேளுங் கள்; விடை என்னவென்று பாருங்கள். இதில் அரசியல் உள்நோக்கமும் இருக்கிறது என்று கருத இடமிருக்கிறது. இந்தக் காளை மாட்டின்மூலமாக கவிழ்த்துவிடலாம் என்கிற சந்தேகம் இப்பொழுது வந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை சரியாகக் கையாள்கிறதா தமிழக அரசு

செய்தியாளர்: தமிழக அரசு இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாண்டு இருக்கிறதா?

கி.வீரமணி: தமிழக அரசு சரியாகக் கையாளப் போகிறதா? இல்லையா? என்பது இனிமேல்தான் தெரிய வரும். இதுவரையில் கையாண்டது முக்கியமல்ல; இனிமேல் சரியாகக் கையாளப் போகிறதா? என்பதுதான் முக்கியம். ஏனென்றால், உறுதியாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார் முதலமைச்சர்.  அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவரிடம் கேளுங்கள்.
மக்களுக்காகத்தான் சட்டம்; சட்டத்திற்காக மக்கள் அல்ல. 

செய்தியாளர்: பல்வேறு அமைப்பினர் தடையை மீறி ஜல்லிக் கட்டினை நடத்துவோம் என்று சொல்லியிருக்கிறார்களே?

கி.வீரமணி: மக்களுடைய உணர்வுகள்தான் முக்கியம். மக்களுக்காகத்தான் சட்டம்; சட்டத்திற்காக மக்கள் அல்ல. தலைக்குத்தான் குல்லா; குல்லாவிற்காக தலை இல்லை.

இவ்வாறு கூறினார்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :