Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியுடையவர்கள் அதிமுகவில் இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் || ஓ.பி.எஸ். துணையுடன் பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது: அன்வர் ராஜா || தடை செய்யப்பட்ட இடத்தில் லாரி உரிமையாளர் அமைத்த பாதையை அகற்றிய விவசாயிகள் || ஜெ. வாரிசு யார்? என்பதை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள்: ஜெ.தீபா பேட்டி || தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி -துரைமுருகன் || தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ் || இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன் || தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார் || தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார் || தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன || சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி || டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (19:10 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (20:40 IST)


கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? 
உரிமையாளர்கள் போராட்டம்!
டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவான்னோடை தர்கா பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவர் வீட்டில் எராளமான மாடுகள் வளர்த்து வருகிறார், இவர் வளர்த்த பசு மாடுகளில் ஒன்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு கன்றுக்குட்டி போட்டது. இதனை பராமரித்து வந்த மதியழகன் தங்களது மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள்  தனது வீட்டின் பின்புறம் கோரையாறு வழியாக முத்துப்பேட்டை புதிய பேரூந்து நிலையம் பகுதியில் மேய்ந்து வருவதை அறிந்து அடிக்கடி மாலையில் அழைத்து வந்து வீட்டில் சேர்ப்பார்.

சிலநேரங்களில் மாடுகள் பல நாட்கள் புதிய பேரூந்து நிலையம் பகுதியிலேயே தங்கியும் விடும். இந்தநிலையில் கடந்த ஐந்து மாதங்களாக முத்துப்பேட்டையில் சுற்றித்திரியும் மாடுகளால் பல்வேறு வகையில் இடையூறு ஏற்படுகிறது என்ற பிரச்சனை வந்ததால் மதியழகன் அப்பகுதியில் மாடுகளை விடாமல் தனது வீட்டில்லேயே கட்டிப்போட்டு வளர்த்து பராமரித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 27.12.2016 ந்தேதி மதியழகன் வீட்டிற்கு சென்ற ஜாம்புவான்னோடை தெற்கு தெருவை சேர்ந்த ராஜரெத்தினம் என்பவர் மதியழகன் வீட்டில் இருந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த  கற்றுக்குட்டி ஒன்றை பார்த்து 'என்னோட கன்றுக்குட்டி கடந்த மூன்று மாதத்திற்கு முன் காணமல் போகிவிட்டது.

இது என்னோட கன்றுக்குட்டி' என்று உரிமை கொண்டாடினர். இதனால் இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் தனித்தனியாக புகார் அளித்தனர். இதனை விசாரித்த போலீசார் கன்றுக்குட்டியையும் இருவரது தாய் பசுவையும் கொண்டுவரும்படியும். எந்த தாய் பசு பின்னாடி கன்றுக்குட்டி செல்கிறதோ அவருக்குத்தான் அந்த கன்றுக்குட்டி என்று கூறினார். இதனையடுத்து இருவரது பசுவும் கன்றுக்குட்டியும் வந்தன.. அப்போது மதியழகன் பசுவுடன் கன்றுக்குட்டி சென்றது. இதனையடுத்து மதியழகனிடம் கன்றுக்குட்டி ஒப்படைக்க பட்டது.

இதில் அதிருப்தி அடைந்த ராஜரெத்தினம் தரப்பினர் மதியழகன் வீட்டிற்கு சென்று அத்துமீறி கன்றுக்குட்டியை தூக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் இருதரப்பை சேர்ந்தவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து மீண்டும் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் அத்துமீறி தனது வீட்டில் புகுந்து ராஜரெத்தினம் தரப்பினர் தன்னிடம் தகராறு செய்து கன்றுக்குட்டியை தூக்கி சென்றதாக மதியழகன் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கன்றுக்குட்டியையும் பசுவையும் பறிமுதல்செய்து இருதரப்பினரையும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கன்றுக்குட்டிக்கு கால்நடை மருத்துவக்குழுவினரால் இரத்தம் எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் கற்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? என்று இருமாடுகளை வைத்து உரிமையாளர்கள் போலீசாரிடம் போராடி வரும் இந்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இருதரப்பை சேர்ந்தவர்களிடையே மோதல் உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

-இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :