Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி || சேலம் அருகே போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறை || சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் பேராசிரியர் மீது கல்வீச்சு || மணலியில் திமுக எம்.எல்.ஏ ஆய்வு || நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி || 50 லட்சம் மதிப்புள்ள டிவிடிக்கள் பறிமுதல் || மொபைல் போன் இணைப்பிற்கான கட்டணம் குறைப்பு: டிராய் || இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல் || பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய ஒபிஎஸ் ! || 2 வழக்குகள்:அறை 23- ல் நீதிபதி துரைசாமி விசாரிக்கிறார் || அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை || யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (13:5 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (13:9 IST)


ஸ்மார்ட் கார்டு வழங்காமல் இருப்பது வெட்கக் கேடானது;
 வேதனை தருகிறது: மு.க.ஸ்டாலின் 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் தொடங்குகிறது. தற்போது உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2017 முதல் 31.12.2017 வரை நீட்டிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் திகழும் ரேசன் கார்டுகள் வி‌ஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து “தாள் ஒட்டும் பணியில்” மட்டுமே அதிக கவனம் செலுத்தி, புதிய “ஸ்மார்ட் கார்டு” வழங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருவது வெட்கக் கேடானதாகவும், வேதனை தருவதாகவும் இருக்கிறது. 

தமிழகத்தில் கழக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த பொது விநியோகத் திட்டத்தில் இந்த அரசுக்கு எவ்வித அக்கறையோ, ஆர்வமோ இல்லை என்பதையே இந்த வருடமும் “தாள் ஒட்டும் பணி துவங்கப்படும்” என்ற அதிமுக அரசின் அறிவிப்பில் எதிரொலிக்கிறது.

2011ல் அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக “ஸ்மார்ட் கார்டு” வழங்கப்படும் என “அறிவிப்பு” வெளியிட்டு, அதற்கு 700 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

2015-ல் தமிழக சட்ட மன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ் “ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக 318 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் “சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் முதற்கட்டமாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்” என்றும் அறிவித்தார். ஆனால் இன்று வரை ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறைவு செய்யப்பட்டு அந்த இரு மாவட்டங்களில் கூட இத்திட்டம் அமலுக்கு வரவில்லை என்பது தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆறாண்டு கால செயல்பாட்டின் லட்சணமாக இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரத்து 386 ரே‌ஷன் கார்டுகளில் மீண்டும் “உள்தாள் ஒட்டும் பணி” துவங்கப்படும் என்று இப்போது அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பது “ஸ்மார்ட் கார்டு அறிவிப்பு”ம் வெற்று அறிவிப்பாகவே இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. இது மட்டுமல்ல, கடந்த ஆறு ஆண்டு காலத்தில் செய்யப்பட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகள் இப்படித்தான் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்ற தி.மு.க.வின் குற்றச்சாட்டு மீண்டும் உறுதியாகியிருக்கிறது. அறிவிப்பும், ஆடம்பரமும் மட்டுமே இந்த அ.தி.மு.க. ஆட்சியின் அடையாளங்கள் என்பதற்கு கிஞ்சிற்றும் கவலையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு திட்ட அறிவிப்பு மேலும் ஒரு மோசமான உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சட்டமன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அறிவித்த 318 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. “உணவு பாதுகாப்புச் சட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விட்டு, மறைந்த ஜெயலலிதா அம்மையார் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் திடீரென்று அந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து தங்களது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது போல், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்திலிருந்தும் அதிமுக அரசு பின் வாங்கி விட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

ஆகவே சட்ட மன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 318 கோடி ரூபாய் நிதி என்ன ஆயிற்று, அந்த நிதி எந்தெந்த பணிகளுக்காக செலவிடப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு மக்கள் மன்றத்தில் உரிய விளக்க மளிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள இந்த அரசும் குடும்ப அட்டைகளில் “தாள் ஒட்டும் பணியில்” மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்காமல் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கும், முகவரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக இருக்கும் குடும்ப அட்டையில் இருக்கும் ஆறாண்டு கால குழப்பத்தை நீக்கி, ஏற்கனவே அறிவித்த படி ஸ்மார்ட் கார்டு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விலைவாசி உயர்வுகள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முக்கியம் என்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் முதல்-அமைச்சர் மிக முக்கியக் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : SUNDAR Country : United Arab Emirates Date :1/1/2017 4:57:50 PM
எதிர்க்கட்சி இனியாவது வாய தொறக்கலாமே போராட்டம் நடத்தலாமே .ஆளுங்கட்சியுடன் சேர்ந்து கொள்ளையடிக்க பிளானை போட்டீங்களா .விவசாயி செத்துட்டு இருக்கான் .