Add1
logo
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன் || தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி || மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம் || இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி! || சென்னை எனக்கு இரண்டாவது வீடு! - சி.எஸ்.கே. ரீஎண்ட்ரி உற்சாகத்தில் தோனி || தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி || தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ் || வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி || 41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்! || தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன் || வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான் || பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (11:34 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (11:34 IST)


மத்திய அரசு இரட்டை வேடமிட்டு தமிழக மக்களை
ஏமாற்றி வருகிறது-சு. திருநாவுக்கரசர்

 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழர் திருநாளாம் தை திருநாளில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நீண்ட நெடுங்காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் மிகச் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு உலகத்தின் பல பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பெருமை சேர்த்து வந்தது.

தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதி மன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னனியில் தான் கடந்த 11.07.2011-இல் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளைச் சேர்த்து ஓர் அறிவிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த மே 7, 2014 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடிப்படையில் மத்திய அரசின் அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது. இந்தப் பின்னனியில் கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலைiயில் மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஜனவரி 8, 2016இல் வெளியிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் பட்டியலிலிருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்தது. ஆனால் அந்த பட்டியலிலிருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மத்திய பா.ஜ.க அரசு இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு, அமைச்சரவையின் ஒப்புதலையோ, விலங்குகள் நல வாரியத்தையோ கலந்து ஆலோசிச்கவில்லை.

இது குறித்து தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி தெரிவித்த எதிர்ப்பையும் மீறி தமிழக பா.ஜ.க.வினரை தற்காலிகமாக திருப்தி படுத்துவதற்காக, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த அறிவிக்கையை வெளியிட்டார். இந்த அறிவிக்கையை வைத்துக் கொண்டு தமிழக பா.ஜ.க.வினர் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் வெற்றிச் சுவரொட்டிகளை ஒட்டி ஆரவாரம் செய்தனர்.

விரைவில் தமிழர்கள் ஜல்லிக்கட்டை நடத்தி மோடிப் பொங்கல் கொண்டாடுவார்கள் என்று குதுகலமாக அறிக்கை வெளியிட்டு மகிழ்ந்தனர், ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்க முடியவில்லை. இச்சூழலில் இந்த அறிவிக்கையை எதிர்த்து மத்திய அரசைச் சார்ந்த விலங்குகள் நல வாரியமும், சமூக ஆர்வலர்களும் தொடுத்த வழக்கில் மத்திய பா.ஜ.க. அரசின் அறிவிக்கையை 11.02.2016-இல் உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

உச்சமன்றத்தின் ஆணையை மத்திய அரசின் நிர்வாக ரீதியான அறிவிக்கையின் மூலம் ரத்து செய்துவிட முடியுமா? என்கிற அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே, மத்திய பா.ஜ.க அரசு இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது. இதன் மூலம் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை வரும் ஆண்டிலும் நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி மிகப் பெரிய துரோகத்தை மத்திய அரசின் துணையோடு தமிழக பா.ஜ.க.வினர் செய்துள்ளனர். இச்செயலை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டை கடந்த இரண்டு வருடங்களாக நடத்தாததற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு 11.07.2011-இல் வெளியிட்ட அறிவிக்கைதான் காரணம் என்று மத்திய பா.ஜ.க அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் 2011ஆம் ஆண்டு அறிவிக்கைக்குப் பிறகு 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை உயர்நீதிமன்ற ஆணையின் மூலமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு மிகச் சிறப்பாக நடைபெற்றதை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். ஆனால் மே 7, 2014 அன்று வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஜல்லிகட்டு நடத்த வெறும் அறிவிக்கை வெளியிடாமல் மத்திய பா.ஜ.க. அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருந்தால், தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மிகப் பெரிய வாய்பாக அமைந்திருக்கும்.

ஆனால் மத்திய பா.ஜக. அரசை பின்னாலே இருந்து இயக்குகிற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி பசு
வதைக்கு எதிராக குரல் கொடுத்து போராடி வருகிறதோ, அதேபோல ஜல்லிகட்டு விளையாட்டு மூலம் காளை மாடுகள் வதை செய்யபடுவதாக கருதி எதிர்ப்பதால்தான் ஜல்லிகட்டு விளையாட்டை நடத்துவதில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே வருகிற ஆண்டிலும்; ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கு மத்திய பா.ஜ.க அரசும், தமிழக பா.ஜ.க.வும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வருகிற தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு வருவதை கண்டிக்கிற வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிரப்பிக்க உரிய நடவடிக்கைளை எடுக்க கூறியும் வருகிற 3.1.2017 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அலங்காநல்லூரியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. ஆர். இராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களோடு பெருமளவில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என இவ்வாறு கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : guru Country : Canada Date :1/2/2017 4:24:57 AM
இந்த மந்தி தாவாத கட்சி ஏதாவது உண்டா? பெரிய ஆள் மாதிரி கத்திக்குத்து.இதன் இப்போதைய தலைவர் புத்தாண்டு கொண்டாட லண்டன் போயுள்ளார்.