Add1
logo
இலங்கையில் கனமழைக்கு 201 பலி - நிவாரண உதவி வழங்கிய சீனா || இந்தியா - பாகிஸ்தான் தொடருக்கு அனுமதி மறுப்பு - அமைச்சர் கோயல் || வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - ஜப்பான் பிரதமர் கண்டனம் || மோரா புயல் இன்று கரை கடக்கிறது || பராமரிப்பு பணியால் மின்உற்பத்தி நிறுத்தம் || ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி 2 மாணவிகள் பலி || சென்னையில் மின்வெட்டு இரவில் மக்கள் தவிப்பு || ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் || விசாரணைக்கு சென்ற நாம்தமிழர் கட்சியினர் கைது || அமைதி வழியில் போராடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதா? ஆம்ஆத்மி கட்சி வசீகரன் கண்டனம்! || ஸ்ரீநித்ய கல்யாண வேங்கடேஷ்வர பெருமாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா || சங்கமித்ரா படத்திலிருந்து நீக்கப்பட்டது ஏன்? ஸ்ருதிஹாசன் விளக்கம் ‘ || சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கம் ||
1, ஜனவரி 2017
5 மாநில தேர்தல்: எந்த நேரத்திலும் தேதி அறிவிக்கப்படலாம்
......................................
தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவைக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: நடிகர் பாண்டு கருத்து
......................................
உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு
......................................
டிச. 31 மோடி உரையில் ஒன்றுமில்லை: சர்வதேச அளவில் கேலிக்குரியவராக மாறிவிட்டார்: கெஜ்ரிவால்
......................................
தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டி
......................................
பல கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் சிக்கியது
......................................
விலை உயர்வு: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 70
......................................
கோவையில் மதிமுக பொதுக்குழு
......................................
சுற்றுலா பயனிகளை ஏமாற்றிய சித்தன்னவாசல் (படங்கள்)
......................................
கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்? உரிமையாளர்கள் போராட்டம்! டிஎன்ஏ பரிசோதனை செய்யமுடிவு!
......................................
துருக்கி - தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு
......................................
நெல்லையில் திருவாதிரை திருவிழா
......................................
வதந்தி பரவியதால் பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்
......................................
பேருந்து விபத்து - ஐயப்ப பக்தர்கள் 3 பேர் பலி
......................................
மான்வேட்டை : 2 பேர் கைது : 2 பேர் ஓட்டம் (படம்)
......................................
அரசு மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு: இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து மறியல்
......................................
ஒரே நாளில் ரூ.75 ஆயிரம் உண்டியல் வசூல்
......................................
100 ஆண்டு பழமையான வாரச்சந்தைக்கு மூடுவிழாவா? அதே இடத்தில் சந்தை நடத்த வியாபாரிகள் கோரிக்கை
......................................
கோவை - பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய பொதுமக்கள்
......................................
அரவிந்த் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீச்சு
......................................
வெடி விபத்தில் 2 பேர் பலி 4 பேர் படுகாயம்
......................................
அரசு பேருந்து விபத்து! மது அருந்தி வாகனம் ஓட்டிய ஒட்டுனர் கைது!
......................................
புதுக்கோட்டையில் வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
......................................
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் - விலை ரூ.2 உயர்வு
......................................
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் அன்னதானம் நடந்தது. (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 1, ஜனவரி 2017 (0:49 IST)
மாற்றம் செய்த நாள் :1, ஜனவரி 2017 (0:49 IST)


பத்தாம் வகுப்பு மாணவி கூறிய பொய்: சாப்பிடாமல், தூங்காமல் குழம்பிய போலீசார்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று இரவு 8 மணிக்கு 15 வயது சிறுமி அழுதுகொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னை 4 பேர் கடத்தி வந்ததாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் கூறினார்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அந்த சிறுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

என் பெயர் திலகவதி, என் தந்தை பெயர் கண்ணையன், தாய் பெயர் லட்சுமி. நாங்கள் சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வருகிறோம். அமிஞ்சிக்கரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான் 10-வகுப்பு படித்து வருகிறேன். நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றேன்.

அரும்பாக்கம் பஸ்நிறுத்தத்தில் நான் நின்று கொண்டிருந்தபோது என் அருகே சிவப்பு நிற கார் வந்து நின்றது. காரில் டிரைவர் மற்றும் 3 பேர் இருந்தனர். அவர்கள் திடீரென்று கீழே இறங்கினர்.

என் முகத்தில் வெள்ளை நிற கைக்குட்டையால் அமுக்கினர். இதில் நான் மயக்கம் அடைந்தேன். உடனே என்னை காரில் ஏற்றிக்கடத்தி சென்றனர். இரவு 8 மணியளவில் ஒரு இடத்தில் கார் நின்றது.

அப்போது எனக்கு மயக்கம் தெளிந்தது. நான் விழித்து பார்த்தபோது காரில் மேலும் 4 பெண்கள் இருப்பதை பார்த்தேன். காரில் என்னை கடத்தி வந்தவர்கள் காரில் இருந்து இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றனர். உடனே நான் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவந்துவிட்டேன் என கூறியுள்ளார். கடத்தி வரப்பட்ட காரின் எண்ணும் தெரியாது என கூறியுள்ளார். 

மேலும் 4 பெண்கள் அந்த காரில் கடத்தப்பட்டதாக கூறினார். உடனே போலீசார் அவர் கூறியதை நம்பி அனைத்து பகுதிகளிலும் அந்த காரை பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஆனால் சந்தேகப்படுபடியாக எந்த காரும் சிக்கவில்லை.

பின்னர் திலகவதியிடம் கூடுதலாக விசாரணை நடத்த அனைத்து மகளிர் போலீசில் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரிடமிருந்த பஸ் டிக்கெட்டுகளை பெண் போலீசார் கைப்பற்றினர்.

அந்த டிக்கெட்டு குறித்து விசாரித்தபோது, சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுவைக்கு அவர் பஸ்சில் வந்ததும், அங்கிருந்து சேத்தியாத்தோப்புக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. அவர் காரில் கடத்தப்படவில்லை என்றும், காரில் மர்மமனிதர்கள் கடத்தியாக நாடகமாடியதும் தெரிந்தது.

தொடர்ந்து திலகவதியிடம் விசாரித்தபோது சரியாக படிக்காததால் பள்ளி ஆசிரியை திட்டியதால் கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறி சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாளையசேந்தங்குடி பகுதியை சேர்ந்த தன் மாமாவை பார்ப்பதற்காக பஸ்சில் வந்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இரவு 11 மணியளவில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் திலகவதியை போலீசார் ஒப்படைத்தனர். 

எஸ்.பி.சேகர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :