Add1
logo
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது லத்தியால் தாக்கிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் || தை புரட்சி (ஜல்லிகட்டு) வெற்றிவிழா விழிப்புணர்வு கொண்டாட்டம் || மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (18:10 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (21:48 IST)

குதூகலம் இல்லாத பொங்கல் திருவிழா

 தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஒவ்வொரு தமிழனின் வாழ்வியல் உண்மையாக இருந்த காலம் உண்டு. ஆனால் இன்று சித்திரையே பிறந்தாலும் வழிபிறக்காது ’’ என்று மனம் கலங்கி கூறுகின்றனர் தமிழகத்தில் பெரும்பாண்மையாக இருக்கும் கிராமத்துமக்கள்.

தை முதல் நாளை நம் தமிழர்கள் தனிப்பெரும் திருநாளாக கொண்டாடிவருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் பொதுவான திருவிழாவாகவும், சமயம் கடந்து கொண்டாடப்படும் திருவிழாவாக பொங்கள் திருவிழா இருந்துவருகிறது.     உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், தங்களோடு ஒன்றியிருக்கும் உயிரினங்களுக்கு நன்றி சொல்லும் ஒரு திருவிழாவாக   கொண்டாடப்படுகிறது.

சங்ககாலங்களில் ’’ நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் ஆடி மாதம் விரதத்தை துவங்கி, பொங்கலில் தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்து மகிழ்விக்கும்  ஆகாயத்திற்கும், பூமிக்கும், விவசாயத்திற்கும் தங்களோடு உதவிய  கால்நடைகளுக்கும்   நன்றி தெரிவிக்கும் விதமாக வீட்டு வாசலில், நிலத்தில் விளைந்த கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சிகொத்தை  கொண்டு மண்பாணையில் வாசலில் பொங்கல் வைத்து    படைத்து வழிபட்டனர். 

பொங்கல் திருவிழா பத்து நாட்களுக்கு முன்பே கலைக்கட்டத்தொடங்கிவிடும் தொடங்கிவிடும். வீடுகளில் வர்ணம் பூசுவார்கள், மண்பாணைகள், கரும்பு, வாழைத்தார், மாட்டுக்கான நெட்டிமாலை என குதூகலமாக கடைவீதிகளை அடைத்துக்காணப்படும், இளைஞர்கள் கிராமத் தலைவர்களிடம் விளையாட்டுப் போட்டிகளுக்கான உதவிகள் கேட்டு விழா ஏற்பாடுகளை செய்வார்கள், குறிப்பாக நெற்கலஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா மாவட்டங்கள் கலைக்கட்டும்,  ஆனால் இந்த ஆண்டு அதற்காக அடையாளமே இல்லாமல் கானப்படுக்கிறது. அதற்கு காரனம் என்ன கிராமங்களை சுற்றிவந்தோம்.

திருவாரூர் முருகப்பன் கூறுகையில், வழக்கமாக ஆடி மாதம் விதை விதைத்தா தை மாதத்திற்கு முன்னாடியே அறுவடைக்கு வந்துவிடும், அதுவும் ஆட்களை கொண்டே அறுவடை நடக்கும், நிலம் வைத்திருக்கும் விவசாயி வீட்டிலும் புதுநெல் இருக்கும், அவர்களின் நிலத்தை நம்பியிருக்கிற கூலித்தொழிலாளிகளின் வீட்டிலும் கூலியாக கிடைத்த நெல் இருக்கும். அந்த புது நெல்லை குத்தி பொங்கல் வைத்து கொண்டாடுவது தான் சந்தோசம். தை பிறப்பதற்குள் ஒவ்வொரு கூலித்தொழிலாளிகளும் அறுவடை பனியில் ஈடுப்பட்டு கூலியாக கிடைத்த நெல் வீட்டில் நான்கு மூட்டை ஐந்து மூட்டை இருக்கும், பொங்கல் செலவுக்கு பணம் இல்லை என்கிற கவலையும் இருக்காது, பணம் வைத்துள்ளவர்கள் துணிந்து கடன் கொடுப்பார்கள். ஆனால் இன்று எல்லாமே தலைக்கீழாக மாறிவிட்டது, வழக்கமாக பொழிய வேண்டிய பருவ மழை ஆண்டு தோரும் பொய்த்துக்கொண்டே வருகிறது, காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரும் முறையாக கிடைக்கிறது இல்ல, வழக்கமாக ஆடி மாதம் வித்தைக்கும் பருவமும் மாறி புரட்டாசி, ஐப்பசியில் விதைக்க வேண்டியிருக்கு, அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லாம போயிடுச்சி. கூலித்தொழிலாளிகளுக்கு வேலையில்லாமல் போயிடுச்சி, தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி நிலம் வைத்துள்ள விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்து நிலை அதிகமாகிடுச்சி, விவசாயத்தொழிலை நம்பியிருக்கும் கூலித்தொழிலாளிகளின் நிலமை மோசமாகிடுச்சி, கூலித்தொழிலாளிகளின் வாழ்வு செழித்தால் தான் வர்த்தகம் வளரும், பொங்கல் சிறக்கும் சாப்பாட்டுக்கே ரேசன் கடைய நம்பியிருக்கும் கூலித்தொழிலாளிகள் எப்படி கரும்பு வாங்குவான், வாழை வாங்குவான், இனி பழங்காலம் திரும்பி வருவது கரந்த பால் மீண்டும் மடியில் ஏறுவது போலத்தான். ‘’ என்றார் கனத்த மனத்தோடு. 

திருவாரூர், குடவாசல், கும்பகோணம் என பெரு நகரங்களிலும் பொங்களுக்கான அறிகுறியே இல்லாமல் காணப்பட்டது, இஞ்சி கொத்து விற்பனையில் துவங்கி கரும்பு விற்பனை வரை எங்கேயும் கூட்டம் இல்லை. 

இஞ்சிகொத்து, நெட்டிமாலை விற்பனையில்லாமல் ஈ ஓட்டிகொண்டிருந்த குடவாசல் ஐயாங்குட்டியிடம் விசாரித்தோம், ‘’ மக்கள் கையில காசு இல்லங்க,  பொங்கல் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வியாபாரம் சூடுபிடித்துவிடும், தலைவரிசை வைக்கிறவங்க ஒருவாரத்திற்கு முன்னாடியில் இருந்தே போக ஆரம்பிச்சிடுவாங்க, பணக்காரர்களால் வியாபாரம் இருக்காது, கிராமபுற ஏழை விவசாயிங்களால தான் வியாபாரம் நடக்கும். இப்ப வேலையில்லாம, சாப்பாட்டுக்கே வழியில்லாம 100 நாள் வேலைகளை நம்பியும், கிடைக்கிற மராமத்துவேலைகளை நம்பியும் பொழப்பு நடத்துறாங்க, அரசாங்கம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குது ஆனால் விவசாயத்தையே நம்பியிருக்கிற தினக்கூலிகளை கைவிட்டுச்சி, ‘’ என்கிறார்.

 ’’ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே, 
 என்றும் நம்ம வழ்விலே பஞ்சமே இல்லே, 
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே,
 பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே,
 நாம் ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே,
 இந்த தேசமெல்லாம் செழித்துடுது நம்ம கையாலே,’’ இப்படி கழனி கவிஞர் மருதகாசியின் பாடல் இருக்கும், 

அப்படி செழிக்கவைத்த விவசாயம் பொய்த்ததால் பொங்கள் திருவிழா குதூகலம் இல்லாமலேயே இருக்கிறது.

-க.செல்வகுமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :