Add1
logo
மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணம்! நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் - ஜி.ரா., வலியுறுத்தல் || இந்துமுறைப்படி பிரான்ஸ் பெண்ணை மணமுடித்த தமிழக தொழிலதிபர்! || போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல் || நீதிமன்ற வளாகத்தில் ஆண் ஒருவர் தற்கொலை முயற்சி! || சொத்து தகராறு காரணமாக இளைஞரை படுகொலை செய்த உறவினர்கள்! || மாணவர் சரத்பிரபுக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || மாநகராட்சி அதிகாரிகளுடன் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்! || பொங்கல் திருவிழாவில் சோகம் - தலித் மக்கள் மீது சாதி வெறியர்கள் கொலை வெறித்தாக்குதல்! || வைரமுத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் இருந்திருக்க வேண்டும்: சீமான் || வழி தவறி ஊருக்குள் வந்த காட்டு மாடு கிணற்றில் விழுந்து பலி! || அப்பல்லோ ஆய்வு மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு! || மன்னார்குடியில் தினகரன் கொடியை கிழித்து அ.தி.மு.க கொடி ஏற்றம்! ||
முக்கிய செய்திகள்
போராட துணிச்சல் இல்லாத கமல்ஹாசன், ரஜினிகாந்த்! - தங்கதமிழ்செல்வன் சாடல்
 ................................................................
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு!
 ................................................................
மோடி, அமித்ஷா, ஹெக்டே போன்றோர் இந்துக்களே அல்ல! - நடிகர் பிரகாஷ்ராஜ்
 ................................................................
மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை சட்டவிரோதமாக கருதலாம்! - ஐகோர்ட் மதுரை கிளை
 ................................................................
வேலைவாய்ப்புகளைத் தேடாதீர்கள்.. உருவாக்குங்கள்! - வெங்கையா நாயுடு வேண்டுகோள்
 ................................................................
வைரமுத்துவின் நாக்கிற்கு விலை, இந்துக்கள் கொலை செய்யவேண்டும்! - நயினார் நாகேந்திரன் சர்ச்சைப் பேச்சு
 ................................................................
மக்களை சந்திக்க ரஜினி திட்டம் (Exclusive)
 ................................................................
தினகரன், திவாகரனைக் கைது செய்தால் உண்மை தெரிந்துவிடும்! - ஜெயக்குமார்
 ................................................................
பிரகாஷ்ராஜ் பேசிய மேடையை மாட்டு மூத்திரத்தால் கழுவிய பாஜகவினர்!
 ................................................................
வாத்து நடை தண்டனையால் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
 ................................................................
ரஜினிகாந்த் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் -கமல்ஹாசன்
 ................................................................
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, ஜனவரி 2018 (18:0 IST)
மாற்றம் செய்த நாள் :14, ஜனவரி 2018 (18:0 IST)

ஆண்கள் மட்டும் கொண்டாடும் பொங்கல் விழா!விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது நயினார் பாளையம். இந்த ஊரின் ஏறிக்கரையோரம் உள்ள காட்டுப் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலின்போது கைகுத்தல் அரிசியை கொண்டு ஆண்கள் மட்டுமே பொங்கல் வைத்து படையிடும் விநோத பழக்கம் உள்ளது என்பதை கேள்விப்பட்ட நாம் அந்த ஊருக்கே சென்றோம். 

ஊரின் மூத்தோர்களில் ஒருவரான குருமணி - பாலு ஆகியோரை சந்தித்தோம். 

எங்கள் பூர்வீகம் நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடத்தின் தென்கரையில் முன்னொரு காலத்தில் இருந்த ஊர் வெள்ளம் தாங்கி இருப்பு என்ற கிராமம். ஆற்றங்கரையோரம் வளமையான விவசாய பூமி பொதுவாக மனித நாகரீகம் தோன்றியதும் மனிதர்கள் வாழ்விடம் அமைத்துக்கொண்டதும் நதிக்கரையோரப் பகுதிகளில்தான் என்பது வரலாறு. ஆனால் எங்கள் முன்னோர்கள் அப்படிப்பட்ட பூமியைவிட்டு மேடான பகுதியை தேடி ஊரையே காலி செய்து கொண்டு புறப்பட்டார்கள். காரணம் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் கொள்ளிடத்தில் கட்டுக்கடங்காத வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது எங்கள் ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்து வீடுகளையும், மக்களையும் அடித்துக்கொண்டுபோனது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் பல குடும்பங்களை வெள்ளத்தில் பலி கொடுத்தனர்.

இப்படியே போனால் ஒரு உயிரும் மிஞ்சாது என்று ஊர் மக்கள் கூடிபேசினார்கள். மிச்சம் மீதி இருக்கும் மக்களை, குழந்தைகளை காப்பாற்ற முடிவு செய்தார்கள். தங்களோடு ஆடு, மாடுகளையும் கூட்டுக்கொண்டு மழை வெள்ளம் சூழாத மேடான பகுதிக்கு போய் பிழைத்துக்கொள்வோம் என முடிவு எடுத்து புறப்பட்டார்கள். அப்படி ஊரை காலி செய்து புறப்பட்டவர்கள் பல இடங்களில் பிரிந்துபோனார்கள். 

அதிலும் ரங்கசாமி, அய்யாசாமி, முத்துசாமி, பொண்ணுசாமி, ராமசாமி ஆகிய சகோதரர்களின் தாய், தகப்பனார் பல குடும்பங்களோடு வடக்கு நோக்கி உள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தனர். கோலியனூர் அருகே உள்ள குரும்பன்கோட்டை என்ற ஊரில் சில நாட்கள் வழிப்பயண களைப்பை போக்கிக்கொண்டு மீண்டீடும் பயணத்தை துவக்கினார்கள். சிலநாட்கள் பயணித்திற்கு பிறகு வானூர் அருகே உள்ள இந்த இடத்தை தேர்வு செய்தார்கள். இங்கே குடிசைபோட்டு காட்டை திருத்தி பிழைப்பை ஏற்படுத்தியபோது, இதே பகுதியை சேர்ந்த நயினார் வகுப்பை சேர்ந்த ஞானி ஒருவர் எங்கள் மூதாதையாரிடம் வந்து பூர்வீகம் பற்றி விசாரித்தார். பிறகு இந்த பகுதி எங்கள் பகுதியான உள்ளது. நீங்களும் இங்கே தங்கி பிழைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாளையக்காரர் வம்சம் என்பதால் எங்கள் பெயரான நயினார் பெயரோடு உங்கள் பட்டத்தையும் சேர்த்து நயினார்பாளையம் என்று ஊருக்கு பெயர் என்று சொல்லி அவரே பெயர் வைத்து அது அரசு கெஜட்டிலும் பதிவாகி உள்ளது அப்போது முதல் இப்போது வரை.

ஏழு தலைமுறைகளாக இஙகே வாழும் நாங்கள் எங்கள் முன்னோர் சொந்த ஊரில் தமிழ் மரபுப்படி வெள்ளந்தாங்கி இருப்பு கிராமத்தில் ஊர் தெய்வமாக விளங்கிய வெள்ளந்தாங்கி வீரன், முன்னடியான், அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபட்டதை நாங்களும வழிபடுகிறோம். உருவமில்லாத அந்த சாமிகளை எப்படி உருவாக்கிறோம் தெரியுமா? எங்கள் முன்னோர்கள் தங்கள் வாழ்ந்த மண்ணை மறக்கக்கூடாது என்று ஊரைவிட்டு புறப்படும்போதே தேங்காய் அளவு தாய் மண்ணை எடுத்து துணியில் முடிந்து கொண்டு வந்தனர். இந்த பூமியில் நிரந்தரமாக தங்க முடிவெடுத்த பிறகு அங்கிருந்து கொண்டுவந்த மண்ணை இந்த மண்ணில் தூவி கலந்தார்கள். அப்படிப்பட்ட இந்த மண்கலந்த பூமியில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல்நாள் பெண்கள் வீட்டுக்கு வீடு நெல்லை உரலில்போட்டு அரிசியாக்குவார்கள். அரிசியை குத்தும்போது அரிசியில் எச்சில் படக்கூடாது என்று வாயில் துணிகட்டிக்கொண்டுதான் குத்துவார்கள். அந்த அரிசியை கொண்டுவந்து ஏரிக்கரையோரம் உள்ள காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சூலம் முன்பு பொங்கல் வைப்பார்கள். எந்தந்த ஊர்களில் எல்லாம் எங்கள் வம்சாவழியினர் வாழ்கிறார்களோ அவர்கள் அனைவருமே வருவார்கள். அவர்களில் வீட்டுக்கு மூத்த ஆண்கள்தான் பொங்கல் வைப்பார்கள். 

இரவு 11 மணிக்கு மேல்தான் பொங்கலை படையிடுவோம். அதன் பின்னர் இரவில் ஊருக்குள் வருவோம். அப்போது மக்கள் நடமாட்டமே இருக்காது. எங்கள் குடும்ப பெண்கள்கூட வீட்டினுள் உள்ள அறைகளில்தான் இருப்பார்கள். நாங்கள் வீட்டுக்கு படையலை கொண்டுபோய் பூஜையரையில் வைத்து கும்பிட்ட பிறகு பெண்களை அழைப்போம். அப்போதுதான் அவர்கள் வருவார்கள். 

எனக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில்தான் சுயமரியாதை திருமணம் நடந்தது என கூறும் குருமணி, இருந்தும் இந்த வழிபாட்டை எங்கள் சமுதாயத்தில் உள்ள கடவுள் மறுப்பு கொள்ளையுள்ளவர்ள் கூட மறக்காமல் வந்து கலந்து கொள்வார்கள் என்கிறார். மற்றப்பட மூடப்பழக்க வழக்கஙகள் எதையும் செய்வதில்லை என்கிறார்கள் குருமணியும், பாலுவும். 

சாமிக்கு பொங்கலிடும்போது ஒவ்வொரு பொங்கல் பானையின்போதும் அரிசியில் கைப்பிடி அளவு எடுத்து முடிந்து வைப்போம். அந்த அரிசையை மறுநாள் பொங்கலின்போது வீட்டில் வைக்கப்படும் பொங்கல்பானை அரிசியில் கலந்து பொங்கல் வைப்பது எங்கள் வழிமுறை என்கிறார்கள் நயினார் பாளையம் கிராம மக்கள். ஒரே ஊர் மக்கள் மட்டுமல்ல அந்த சமுதாய மக்கள் பாண்டி, நாகை, கடலூர் உட்பட பல மாவட்டங்களில் பிரிந்து வாழ்ந்தாலும்கூட தை பொங்கலின்போது நயினார்பாளையம் வந்து தங்கள் குலதெய்வத்துக்கு ஆண்கள் மட்டும் பொங்கலிட்டு படைப்பது விநோத பழக்கமாக உள்ளது என்கிறார்கள் சுற்றுப்பட்டுள்ள மக்கள். 

இவர்கள் வாழ்ந்த ஊரான வெள்ளம்தாங்கி இருப்பு அருகே இப்போதும் மனி இருப்பு என்ற உரை கடந்துதான் இவர்கள் ஊருக்கு போக வேண்டும். மணி இருப்பு கிராமம் இப்போது உள்ளது. ஆனால் வெள்ளம் தாங்கி இருப்பு இருந்த இடமே இப்போது இல்லை. சிட்டிசன் படத்தில் வரும் காட்சிபோல அழிந்துபோன கிராமம். அரசு ஆவணங்களில் கூட இல்லாமல் அதன் அடையாளமாக மரபு வழி மண்வழி மாராமல் வாழ்கிறார்கள் நயினார் பாளையத்தில் அக்கிராம மக்கள். 

 எஸ்.பி.சேகர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :